மேலும் அறிய

9 PM Headlines: ஒரு நிமிடத்தில் ஒரு நாள்.. இதோ இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்!

Headlines 9 PM: காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
  • முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கார் கண்ணாடி உடைப்பு - அதிமுக, திமுக இடையே மோதல்
  • தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவராக சிவசேனாபதி நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.
  • விவசாயிகளுக்கு யூரியா உரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
  • அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
  • தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்தியா:

  • பிளஸ் 2 பொதுத்தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் கல்வி கட்டணம் இலவசம் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. 
  • பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளர்கிறது என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
  • 25 விமான நிலையங்கள் 2025ம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
  • கர்நாடக மகாராஷ்ட்ரா இடையே வலுக்கும் எல்லை பிரச்சனை காரணமாக கொங்னோலி டோல் பிளாசா அருகே போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
  • சபரிமலையில் கடந்த 32 நாட்களில் மட்டும் 20.88 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

உலகம்:

  • சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்க நேரிடும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
  • அணு ஆயுத பயன்பாடு குறித்து இந்திய பிரதமர் மோடி கவலை தெரிவித்திருப்பது ரஷியர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
  • நான் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா?: கருத்துக்கணிப்பை தொடங்கிய எலான் மஸ்க்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.15 கோடியாக உயர்ந்துள்ளது. 

விளையாட்டு:

  • இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தின் உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித்சர்மா ஆடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியது இந்திய அணி
  • ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை- கேரளா அணிகள் இன்று மோதல்
  • அர்ஜெண்டினா அணிக்காக தேசிய போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று மெஸ்ஸி அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Embed widget