மேலும் அறிய

9 PM Headlines: ஒரு நிமிடத்தில் ஒருநாள்! - இன்று முழுவதும் என்ன நடந்தது..?

Headlines 9 PM: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • தெற்கு அந்தமானை ஒட்டி வங்கக்கடலில் உருவான புயல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆளுநர் ரவி முடித்து வைத்தார்.
  • கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், மாணவி பயன்படுத்திய செல்போனை பெற்றோர் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • சென்னை மியூசிக் அகாடமியின் 96ஆவது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் இசை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
  • மார்கழி இசை மன்றங்களில் தமிழ் இசைக்கும், தமிழ் பாடல்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் கோரியுள்ளார்.
  • அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் 10 கல்லூரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பணியிட மாறுதலுக்கான ஆணைகளை வழங்கினார்.
  • மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் உமர் என்பவரது வீட்டில் என்ஐஏ அலுவலர்கள் நடத்திய சோதனையில் கத்தி,வாள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச்சில் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • அரியலூர் விவசாயி மரணம் பற்றிய விசாரணைக் குழுவில் புகாருக்குள்ளான காவல் துறையினர் இடம்பெறக்கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா:

  • குருவிக்காரர் சமுதாயத்தை பழங்குடி பிரிவில் சேர்க்க பல்வேறு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா ஒப்புதலுக்காக, மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 
  • 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த கர்நாடக கல்வித்துறை எடுத்துள்ள முடிவால், மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • எரிபொருள் விலையை உயர்த்தாததால் 3 பெட்ரோலிய நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் ஷ்ரத்தா உடையது என டிஎன்ஏ சோதனையில் தெரிய வந்துள்ளது.

உலகம்:

  • பிரான்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி 36ஆவது ரஃபேல் விமானம் இந்தியா வந்தடைந்தது.
  • நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
  • 2022ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வரை, உலகம் முழுவதும் 363 செய்தியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக பத்தியாளர்களை பாதுகாக்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு  அதன் தலைமை விஞ்ஞானியாக சௌமியா சுவாமிநாதனுக்கு பதிலாக டாக்டர் ஜெர்மி ஃபாரார் நியமிக்கப்படுவார் என்று அறிவித்துள்ளது. தற்போது வெல்கம் அறக்கட்டளையின் இயக்குநராக இருக்கும் டாக்டர் ஃபரார், 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுகாதார அமைப்பில் இணைவார்.

விளையாட்டு:

  • வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
  • அரையிறுதி போட்டிக்குப் பிறகு, பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே மொரோக்கோ அணியின் ஹக்கிமியை டேக் செய்து பதிவிட்டுள்ள நெகிழ்ச்சியான ட்வீட் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 MI vs RR: ஐபில் ராஜா மும்பை! ராஜஸ்தானை சிதறவிட்டு கதறவிட்டு வெற்றி! ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
IPL 2025 MI vs RR: ஐபில் ராஜா மும்பை! ராஜஸ்தானை சிதறவிட்டு கதறவிட்டு வெற்றி! ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
TVK Vijay: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய் முன்புள்ள மாபெரும் சவால்!
TVK Vijay: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய் முன்புள்ள மாபெரும் சவால்!
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பு பாமக வெற்றி.. முதலமைச்சர் பொய் சொல்லக்கூடாது - அன்புமணி பரபரப்பு பேட்டி
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பு பாமக வெற்றி.. முதலமைச்சர் பொய் சொல்லக்கூடாது - அன்புமணி பரபரப்பு பேட்டி
முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Kamakoti Peetam | காஞ்சிபுரம் சங்கர மடத்தின் புதிய பீடாதிபதி..!யார் இந்த கணேச சர்மா?Ajith Health Condition | அட கடவுளே AK-க்கு என்னாச்சு? மருத்துவமனை REPORT AIRPORT-ல் நடந்த சம்பவம்! | ShaliniMadurai Child Death : ’’என் பிள்ளை போச்சு பள்ளி நிர்வாகம் தான் காரணம்’’கதறும் சிறுமியின் தந்தைTamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 MI vs RR: ஐபில் ராஜா மும்பை! ராஜஸ்தானை சிதறவிட்டு கதறவிட்டு வெற்றி! ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
IPL 2025 MI vs RR: ஐபில் ராஜா மும்பை! ராஜஸ்தானை சிதறவிட்டு கதறவிட்டு வெற்றி! ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
TVK Vijay: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய் முன்புள்ள மாபெரும் சவால்!
TVK Vijay: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய் முன்புள்ள மாபெரும் சவால்!
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பு பாமக வெற்றி.. முதலமைச்சர் பொய் சொல்லக்கூடாது - அன்புமணி பரபரப்பு பேட்டி
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பு பாமக வெற்றி.. முதலமைச்சர் பொய் சொல்லக்கூடாது - அன்புமணி பரபரப்பு பேட்டி
முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
யார் ஆட்சிக்கு வந்தாலும் டிரான்ஸ்பர்தான்.. நேர்மையின் மறுபெயர் அசோக்.. யார் இந்த ஐஏஎஸ் அதிகாரி? 
அதிகார வர்க்கத்தை அலறவிட்ட ஐஏஎஸ் அதிகாரி.. முடிவுக்கு வந்த சகாப்தம்.. யார் இந்த அசோக்?
MTC Route Number: சென்னை எம்டிசி பஸ்ல போறவங்களா நீங்க.. அப்போ இந்த முக்கிய மாற்றம் பத்தி தெரிஞ்சுக்கோங்க...
சென்னை எம்டிசி பஸ்ல போறவங்களா நீங்க.. அப்போ இந்த முக்கிய மாற்றம் பத்தி தெரிஞ்சுக்கோங்க...
Trump's Success: சாதித்த ட்ரம்ப்.. சாய்ந்த உக்ரைன்.. கையெழுத்தான ஒப்பந்தம்.. இனி ரஷ்யாவுக்கு சிக்கல் தான்...
சாதித்த ட்ரம்ப்.. சாய்ந்த உக்ரைன்.. கையெழுத்தான ஒப்பந்தம்.. இனி ரஷ்யாவுக்கு சிக்கல் தான்...
IPL 2025: விராட் கோலிக்கே பிடிச்ச பாட்டு சிம்பு பாட்டுதானாம்! என்ன பாட்டு தெரியுமா?
IPL 2025: விராட் கோலிக்கே பிடிச்ச பாட்டு சிம்பு பாட்டுதானாம்! என்ன பாட்டு தெரியுமா?
Embed widget