மேலும் அறிய

8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!

ஒருவேளை 8வது  ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 65 லட்சம் ஓய்வூதியம் பெறுவபவர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து துறை ஊழியர்களும் 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு படிகளைத் திருத்தி அமைப்பதற்காக அமைக்கப்பட்ட 8வது ஊதியக்குழு  தற்போது ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகளுடன் தொடர் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் பிற பொருளாதாரக் காரணிகளைக் கருத்தில் கொண்டு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை இந்த குழுவானது மத்திய அரசிடம் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை 8வது  ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகள், சம்பள நிர்ணயம், சலுகைகள் மற்றும் வேலைப் பாதுகாப்பு தொடர்பான பல கோரிக்கைகளை ஊதியக் குழுவிடம் முன்வைத்துள்ளன. இந்த சந்திப்பில் மத்திய அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்படும் விஷயம் fitment factor எனப்படும் பொருத்த காரணியாகும். இதுதான் புதிய சம்பளம் வரைமுறை மற்றும் ஓய்வூதிய தொகையை நிர்ணயிக்கும் காரணியாகும். 

இந்த சந்திப்பில் மத்திய அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்படும் விஷயம் fitment factor எனப்படும் பொருத்த காரணியாகும். இதுதான் புதிய சம்பளம் வரைமுறை மற்றும் ஓய்வூதிய தொகையை நிர்ணயிக்கும் காரணியாகும். அதாவது ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்ற கணக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தை வைத்து கணக்கிடுவதாகும். 6வது ஊதியக் குழு குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை ₹3,050-லிருந்து ஏறக்குறைய ₹7,000 ஆக உயர்த்தியது. 7வது ஊதியக் குழு   ₹7,000-லிருந்து ₹18,000 ஆக உயர்த்தியது. இதில் கீழ்நிலை ஊழியர் தொடங்கி அமைச்சரவை ஊழியர் ஒரே அளவு ஊதியம் பெற்றனர். 8வது ஊதியக் குழு அடிப்படையில் தங்களுக்கு என்ன மாதிரியான ஊதிய உயர்வு கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர். 

Also Read: Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?

அப்படியாக இந்த ஊழியக்குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டால் அடிப்படை சம்பளம் ரூ.34,560ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ம். உயர் பதவியில் உள்ள ஊழியர்களின் சம்பளம், அந்தந்த ஊதிய மட்டத்திற்கு ஏற்ப அதிக விகிதத்தில் திருத்தி அமைக்கப்படும்.  மேலும் அடிப்படை ஊதிய உயர்வைத் தவிர வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி, மற்றும் பிற படிகளில் திருத்தம் குறித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியைச் சேர்ப்பதில் உள்ள பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் அதனை அமல்படுத்த இன்னும் ஓராண்டாகலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் மத்திய அரசு சுமார் 18 முதல் 24 மாதங்களுக்கு நிலுவைத்தொகையை விடுவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget