Why august 15: ஆகஸ்ட் 15-ஐ சுதந்திர தினமாக தேர்ந்தெடுக்க காரணம் என்ன? சுதந்திர நள்ளிரவில் நேரு பேசியது என்ன?
why august 15: ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதியை இந்தியா சுதந்திரம் அடைந்த நாளாக அறிவிக்கப்பட்டதன் காரணத்தை தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் சுதந்திர போராட்டம் வலுப்பெற்றதை தொடர்ந்து, ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இருக்க முடியவில்லை. இதையடுத்து, இந்தியாவை விட்டு வெளியேற முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் பிரிட்டிஷ் பிரதமர் அட்லி 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 -ம் தேதி, வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்
அறிவிப்பு:
* 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அதிகாரங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு மாற்றப்படும்
*யாருக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பது என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்யும்
*அதிகாரத்தை மாற்றி கொடுக்கும் பொறுப்பை, புதிதாக நியமிக்கப்படும் வைசிராய் மௌன்ட் பேட்டன் மேற்கொள்வார்
பிரிட்டன் பாராளுமன்றத்தில், வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது இந்தியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மௌன்ட் பேட்டன் இந்தியா வருகை:
இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது தொடர்பாக, 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி மௌன்ட் பேட்டன் இந்தியா வந்தடைந்தார். பின்னர் காந்தி, நேரு, ஜின்னா, ஆசாத், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களுடன் விவாதித்தார்.
இந்திய தலைவர்களை சந்தித்த பின்னர், திட்டம் ஒன்றை தயாரித்து நேருவிடம் காட்டினார். ஆனால் நேரு, அந்த திட்டத்தை பார்த்து கோபமடைந்து எதிர்த்தார். இதையடுத்து புதிதாக திட்டம் ஒன்றை பேட்டன் தயாரித்தார். இதுவே மௌன்ட் பேட்டன் திட்டம் என அழைக்கப்படுகிறது. அத்திட்டத்திற்கு இந்திய தலைவர்களின் ஆதரவை பெற்ற பிறகு, பிரிட்டன் அரசிடமும் அங்கீகாரத்தை பெற்றார்.
விடுதலை சட்டம் நிறைவேற்றம்:
இதையடுத்து, இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும் வேலையை பிரிட்டிஷ் அரசாங்கம் துரிதப்படுத்தியது. அதன்படி 1947 ஆம் ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், இந்திய விடுதலை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
விடுதலை சட்டம்:
*பிரிட்டிஷ் இந்தியா, டொமினியன் இந்தியா,டொமினியன் பாகிஸ்தான் என இரண்டாக பிரிக்கப்படுகிறது
*மன்னர் அரசாங்கங்கள், அவர்களின் விருப்பத்திற்கேற்ப இரு அரசுகளில் ஏதேனும் ஒன்றுடன் இணைந்து கொள்ளலாம் அல்லது தனியாக இயங்கலாம்
*1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியிலிருந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு டொமினியன்கள் (சுதந்திர நாடுகள்) உருவாக்கப்படுகிறது
ஏன் ஆகஸ்ட் 15: why August 15
சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15-ம் தேதி, ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என மௌன்ட் பேட்டனிடம், செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பேட்டன் கூறியதாவது, இந்தியாவிற்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில்-தான் சுதந்திரத்தை அறிவிக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் காலம் தாழ்த்தக் கூடாது எண்ணி, ஆகஸ்ட் 15-ஆம் தேதியை அறிவித்தேன். ஏனென்றால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி-தான், இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாடு சரணடைவதாக ஒப்புக் கொண்டது, அந்த வெற்றி தினத்தின் இரண்டாவது வருடம் கொண்டாடப்படுவதையொட்டி, ஆகஸ்ட் 15-ஐ அறிவித்தேன் என மௌன்ட் பேட்டன் தெரிவித்தார்.
முதல் பிரதமர் நேரு:
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திரம் அடைந்த முதல் நாளில், நாட்டின் முதல் பிரதமர் நேரு உரையாற்றினார். அப்போது, உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சுதந்திரமாக வாழ்வதற்காக, இந்தியா விழித்துக் கொள்கிறது என பேசினார்.
Also Read: தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தை கட்டிய ஆங்கிலேயர்கள்; ஒரு சென்னை கதை..
Also Read: ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்வோம்..