மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: புத்துணர்வான காலையில் உங்களை சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகள்.. காலை தலைப்புச் செய்திகளாக இதோ..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- வெள்ளநீர் வடியாததால் சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - காஞ்சிபுரம், செங்கல்பட்டில் சில தாலுக்காக்களுக்கு விடுமுறை
- சென்னையில் இன்று ஆவின் பால் விநியோகம் தட்டுபாடின்றி இருக்கும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
- அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் கைகோர்த்து உதவுங்கள் - மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு
- விரைவில் நிலைமை சீரடையும் - உயிரிழப்புகளைத் தடுக்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
- சென்னையில் 2வது நாளாக பகல், இரவு பாராது தொடர்ந்து மீட்பு பணி - பல இடங்களில் வெள்ளநீர் வடிந்ததால் மக்கள் அவதி
- மிக்ஜாம் புயல் பாதிப்பு - தமிழ்நாடு முழுவதும் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
- சென்னையில் புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக நேரில் ஆய்வு
- சென்னையில் புறநகர் ரயில்கள் இன்று வழக்கம் போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு - குறிப்பிட்ட சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்றும் ரத்து
- சென்னையில் வெள்ளநீர் புகுந்த இடங்களுக்கு நேரிலும், படகிலும் செல்ல முடியாத நிலை - ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் விநியோகம்
- பொதுமக்களை வெள்ள பாதிப்பில் இருந்து காக்க நிரந்தர தீர்வு அவசியம் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்
- பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 13 வரை நீட்டிப்பு
- மிக்ஜாம் புயல் - கனமழையால் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்
- மிக்ஜாம் புயல் பாதிப்பு - தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் நடக்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்
- நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
- புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் நியமனம்
இந்தியா:
- குஜராத்தின் பாரம்பரிய நடமான 'கர்பா' நடனத்தை கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவிப்பு
- இந்தி பேசும் மாநிலங்களை மாட்டு மூத்திர மாநிலங்கள் என பேசியதால் சர்ச்சை - மன்னிப்பு கேட்டார் திமுக எம்.பி., செந்தில்குமார்
- சென்னையில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பை ஆய்வு செய்ய இன்று வருகிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
- தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி - தொண்டர்கள் உற்சாகம்
- நேரு செய்த 2 தவறுகள் தான் ஜம்மு- காஷ்மீரில் பாதிப்பு ஏற்பட காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் - காங்கிரஸ் கண்டனம்
- மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு
உலகம்:
- எகிப்து பாலைவனத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு
- சிங்கப்பூரில் கலை, கலாச்சாரத்தை வளப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பு வழங்குபவர்களுக்கு விருது - இந்திய பெண் எழுத்தாளர் மீரா சந்த் தேர்வு
- பெண்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் கண்ணீர் மல்க பேச்சு
விளையாட்டு:
- புரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் வெற்றி
- டி20 போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றத்து இந்திய பெண்கள் அணி
- ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்
- ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் இன்று மோதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion