மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: ஒரு நிமிடத்தில் உலகத்தை சுற்றிய செய்திகள் உங்கள் கைகளில்.. இன்றைய டாப் ஹெட்லைன்ஸ்..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- திருவண்ணாமலையில் கார்த்தை தீபத்திருவிழா கோலாகலம்;2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம்
- அரசு மருத்துவமனைகளில் ஞாயிறு தவிர தினமும் ஒரு வண்ணத்தில் படுக்கை விரிப்புகள் - சுகாதாரத்துறை முடிவு
- மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாற்றம்; விரைவில் வீடு திரும்புவார் என தகவல்
- யார் வேட்பாளர் என முடிவு செய்யவில்லை, மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவருக்கே வாய்ப்பு - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது வழக்குப்பதிவு- நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு
- வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று உருவாவதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ஆட்சியே பறிபோனாலும் சமூகநீதிக் கொள்கையில் இருந்து பின்வாங்காதவர் வி.பி. சிங் - முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்
- இந்திய மாநிலங்களில் மிகச்சிறப்பான மருத்துவக் கட்டமைப்பை கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- பட்டியல் இன மக்கள் மட்டும் தான் சேரி பகுதியில் வசிப்பார்கள் என்பது கிடையாது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- நீதித்துறையில் திறமையானவர்களுக்கு வாய்ப்பளிக்க அகில இந்திய தேர்வு நடத்த வேண்டும் - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
- உத்தரகாண்டில் 41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தின் மேல் செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கியது - 4 நாட்களில் முடிக்க திட்டம்
- என் மீது பதிவு செய்யப்பட்ட 24 வழக்குகள் எனக்கு மார்பில் குத்தப்பட்ட 24 பதக்கங்களாக கருதுகிறேன் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
- சீனாவில் நிமோனியா காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வருவதை அடுத்து, மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
- ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை பெயர் மாற்றம் செய்தது மத்திய அரசு.
- பிரதமர் மோடி திருப்பதி வருகை; இன்று ஏழுமையான் கோயிலில் சாமி தரிசனம்.
- ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யுங்கள் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
உலகம்:
- அமெரிக்காவில் 3 பாலஸ்தீன மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.
- காசாவில் பணயக்கைதியாக சிறைபிடிக்கப்பட்ட 4 வயது அமெரிக்க சிறுமி பத்திரமாக உள்ளார் - ஜோ பைடன் தகவல்.
- அனைவருக்கும் சமமான சுதந்திரம் என்ற இலக்கை நோக்கி செயல்படுவதை நாங்கள் கைவிட மாட்டோம் - ஜோ பைடன்.
- வெளிநாட்டினர் உள்பட 17 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு.
- ஆஸ்திரியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- சீனா மாஸ்டர் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: சாத்விக் - சிராக் ஜோடி போராடி தோல்வி
- 2019ல் தோனியை ரன் அவுட் செய்ததற்காக தற்போதும் என்னை திட்டி மெயில்கள் வருகிறது - மார்ட்டின் கப்தில்.
- இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- 2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து அவர்களாகவே முடிவு எடுக்க ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் தகுதியானவர்கள் -கிறிஸ் கெயில்
- ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் தற்போது குஜராத் அணியிலேயே தொடர்கிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion