மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்றைய நாளின் முக்கிய நாட்டு நடப்புகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!
7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் அண்ணாவின் 55வது நினைவு தினம் அனுசரிப்பு - பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது சிலைக்கு மரியாதை
- ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை
- அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணி - தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது
- திமுகவின் கூட்டணி கட்சிகள் கடைசி நேரத்தில் அதிமுகவுக்கு வரலாம் - அமைச்சர் ஜெயக்குமார் கணிப்பு
- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிப்ரவரி 25 ஆம் தேதி நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என அறிவிப்பு
- நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு - மதிமுகவுடன் திமுக தேர்தல் குழு இன்று பேச்சுவார்த்தை
- கன்னியாகுமரியில் தமிழ்நாடு - கேரளா அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம்
- புதுச்சேரி மாநில அரசை கண்டித்து பிப்ரவரி 10 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு
- மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என நடத்துநர், ஓட்டுநர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
- ஆம்னி பஸ்களை சென்னை மாநகர எல்லைக்குள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த அனுமதிக்க வேண்டும் - உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்
- தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து 8 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.,க்கள் சார்பில் போராட்டம் அறிவிப்பு
- புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் வாழ்த்து
- கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
இந்தியா:
- அதானியின் மூலதனம் பிரதமர் மோடி என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு
- ஜார்க்கண்டில் சம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசு நாளை பதவியேற்பு - நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் பங்கேற்கலாம் என உத்தரவு
- மேற்கு வங்கத்துக்கான நிதியை விடுவிக்க கோரி அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம்
- தொடரும் சர்ச்சை காரணமாக பஞ்சாப் மாநில ஆளுநர் பதவியில் இருந்து பன்வாரிலால் புரோகித் ராஜினாமா
- காவல் நிலையத்தில் மோதல் - சிவசேனா நிர்வாகி மீது துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்.எல்.ஏ.,
உலகம்:
- கிழக்கு ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க் மீது உக்ரைன் தாக்குதல் - 20 பேர் உயிரிழந்து இருக்கலாம் என ரஷ்யா தகவல்
- சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீ - 10 பேர் உயிரிழப்பு, 1000 வீடுகள் சேதம்
- இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம் - இம்ரான்கான், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை
- தேர்தலில் இந்தியாவின் தலையீடு அதிகம் உள்ளதாக கனடா அரசு குற்றச்சாட்டு
- தென்கொரியாவுக்கு எதிரான போருக்கு தயாராக இருக்குமாறு வடகொரியா படை வீரர்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு
ளையாட்டு:
- ப்ரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி
- ப்ரோ கபடி லீக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது உத்தரப்பிரதேச யோத்தாஸ் அணி
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்; முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி
- இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து - பும்ரா 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion