மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தின் முக்கிய நிகழ்வுகள் - காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள ஏறுதழுவுதல் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி - வெற்றி பெற்ற காளை, வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது
- நாடாளுமன்ற தேர்தல்; திமுக - காங்கிரஸ் இடையே ஜனவரி 28 ஆம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
- தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் மேம்பாலத்தில் கார், லாரிகள் விபத்தில் சிக்கியது - 4 பேர் உயிரிழப்பு
- தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
- தைப்பூசம், குடியரசு தினம் என தொடர் விடுமுறை நாட்கள் எதிரொலி - சொந்த ஊருக்கு படையெடுத்த மக்களால் போக்குவரத்து நெரிசல்
- கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்ட ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு தடை - ஆம்னி பேருந்து சங்கத்தினர் எதிர்ப்பு
- கிளாம்பாக்கமா? கோயம்பேடா? - தென்மாவட்டத்துக்கு ஆம்னி பேருந்து ஏற எங்கு செல்ல வேண்டும் என பரிதவித்த பயணிகள்
- மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து - பல்வேறு கட்சிகள் புறக்கணிப்பு
- ராமர் கோயில் கட்டியதால் மக்கள் பாஜக பக்கம் போவார்கள் என்பது தவறான கருத்து - எடப்பாடி பழனிசாமி
- பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் - அதிமுக சார்பில் போராட்டம் அறிவிப்புன்
- கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா - தமிழ்நாட்டில் இருந்து 4 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி
இந்தியா:
- பிப்ரவரி 16 ஆம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு
- அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - போலீசார் பலத்த பாதுகாப்பு
- பல நூற்றாண்டு கனவு நிறைவேறியுள்ளது - ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு
- குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
- கொல்கத்தா செல்லும் வழியில் மமதா பானர்ஜி சென்ற கார் விபத்து - தலையில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு
- கார் விபத்தில் காயமடைந்த மமதா பானர்ஜி விரைந்து குணமடைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரார்த்தனை
- நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் - அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்மா சர்மா தகவல்
உலகம்:
- மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 70 பேர் உயிரிழப்பு
- சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து - பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு
- உக்ரைன் போர் கைதிகளுடன் சென்ற விமானம் விபத்து - 70 பேர் உயிரிழப்பு
- கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் குறைக்கப்படும் என அந்நாட்டு அரசு தகவல்
- சீனாவில் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த 31 பேர் மீட்பு
- அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்; குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை
விளையாட்டு:
- ப்ரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
- இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இன்று தொடக்கம்
- ப்ரோ கபடி லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி தபாங் வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion