மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்தது என்ன? - இன்றைய காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து 16,932 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
- அதிமுக கட்சித் தலைமை குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
- டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறும் - கடந்தாண்டு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு தேர்வு
- மருந்து கடைகளில் தீவிர சோதனை நடத்திட வேண்டும், மருந்துப் பொருட்கள் போதைப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருவதால், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பது குறித்த ஆலோசனைக்குப்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- வரும் மக்களவை தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் போட்டியிடும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி அறிவிப்பு
- அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பினை தொடங்க கனியாமூர் பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை - பள்ளிக்கு திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவது குறித்து நீதிபதிகள் கேள்வி
- திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலத்தில் நேற்று 3வது நாளாக போராட்டம் - மீண்டும் பணி வழங்க கோரிக்கை
- பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக சொல்லப்பட்ட இருவரையும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிய சில மணி நேரங்களிலேயே கைது செய்த காவல்துறை
- முதுமலையில் ஒரு வாரத்தில் 15 காட்டுப்பன்றிகள் உயிரிழப்பு - ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக என வனத்துறை அதிகாரிகள் விசாரணை
- சென்னை கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகர் இடையே 4.6 கிமீ நீளத்திற்கு ரோப் கார் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடக்கம்
இந்தியா:
- தியேட்டர்களில் கட்டணமில்லா இலவச குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு - குழந்தைகளுக்கான உணவை எடுத்து செல்ல ஆட்சேபனை தெரிவிக்கக்கூடாது என அறிவுறுத்தல்
- அறிவியல் ஆராய்ச்சிகளில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் - இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
- நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஜனவரி 27 ஆம் தேது கலந்துரையாடுவார் என அறிவிப்பு
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் குவிந்த கூட்டம் - ஒரே நாளில் ரூ.7.68 கோடி வசூல்
- மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
- பாரம்பரியாமான 8 ரயில்களை ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயக்கிட இந்திய ரயில்வே துறை முடிவு.
உலகம்:
- தொடர் தாக்குதலால் உக்ரைனை சீர் குலைக்க முயல்கிறது ரஷ்யா; நாட்டைக்காக்க எதையும் செய்வோம் என உக்ரைன் அதிபர் திட்டவட்டம்.
- தங்கள் நாட்டுக்கு வரும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என இங்கிலாந்து அறிவிப்பு
- அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதல் பெண் கவர்னராக கேத்தி ஹோச்சுல் பதவியேற்றார்
- உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகளை பயன்படுத்தியதாக முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ராஜா அதிர்ச்சி தகவல்.
- பாகிஸ்தானில் உள்ள சந்தைகளில் இரவு 8.30 மணிக்கு மேல் மின்சார பயன்பாட்டுக்குத் தடை.
- தங்கள் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படுவதா? - சீனா கடும் கண்டனம்
விளையாட்டு:
- இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றியைப் பெற்றுள்ளது.
- இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வாக வாய்ப்பு இருப்பதாக தகவல்
- ரஞ்சிக்கோப்பை தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சவுராஷ்ட்ரா அணி கேப்டன் உனத்கட் சாதனை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion