மேலும் அறிய
Advertisement
Morning Headlines: கடந்த 24 மணிநேரம்: என்ன நடந்தது? காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தை பொங்கல் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- தமிழ்நாடு முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாடுகளுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வருகின்றனர்.
- பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
- அவனியாபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை வென்றார் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தினைச் சேர்ந்த விஜய்.
- அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலுக்கு காளையை அழைத்து வந்த சிறுமிக்கே பரிசுப் பொருட்களைத் தந்த மாடுபிடி வீரர் விஜய்.
- பொங்கல் விடுமுறையைக் கொண்டாட தலைநகர் சென்னையில் குடும்பம் குடும்பமாக குவிந்த மக்கள் - மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி உற்சாகம்.
- சென்னையில் மூன்றாவது நாளாக களைகட்டிய சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா, முதல்வர் கலந்து கொண்டு கைத்தட்டி கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.
- தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் உட்பட சறுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகளும் பரவலாக நடைபெற்றது.
- மதுரை விமானநிலையம் அருகே திடீரென தீ பற்றி எரிந்த கார், உடனடியாக வெளியேறியதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
- நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த நெடுஞ்சாலைத் துறை பெண் அதிகாரி வீட்டில் 100 சவரண் நகை கொள்ளை - கைவரிசை காட்டியது யார் என காவல்துறை விசாரணை.
- பாரம்பரிய நடனமாடி சத்தியமங்கலத்தில் பொங்கல் கொண்டாடிய மலைவாழ் மக்கள்.
- உசிலம்பட்டி அருகே வளரியுடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு, 400 ஆண்டுகள் பழமையானது என தொல்லியல் துறையினர் கணிப்பு
- நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது.
இந்தியா
- புலம் பெயர்ந்த வாக்காளர்களுக்கு ”ரிமோர்ட் வாக்குப்பதிவு எந்திர முறை” - அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.
- புதுச்சேரியில் 2 டன் அளவிலான தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை பறிமுதல் செய்த காவல் துறை 2 பேரை கைது செய்து ரூ 8 லட்சத்தினை கைப்பற்றிய காவல் துறை
- செகந்திராபாத் - விசாகப்பட்டினம் அருகே 8வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
- காரைக்காலில் நடைபெறும் மலர் கண்காட்சியை கண்டு களிக்கும் பொதுமக்கள் - குதிரை வண்டி ஓட்டி உற்சாகமான போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா
உலகம்
- உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொங்கல் விழா கொண்டாடிய தமிழர்கள்.
- இலங்கை யாழ்பாணத்தில் அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீர் பீச்சியடிப்பு.
- மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தினை வென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த போனி கேப்ரியல்.
- நேபாளத்தில் விமான விபத்து - 68 பயணிகள் பரிதாபமாக பலி, சடலங்களைத் தேடும் பணி தீவிரம்.
விளையாட்டு
- இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி உலக சாதனை
- இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டில் அடித்த சதத்தினால் மேலும் ஒரு உலகசாதனையை படைத்த விராட் கோலி.
- உலக்கோப்பை ஹாக்கியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் டிராவில் முடிந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
விழுப்புரம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion