மேலும் அறிய

Drug Seized: இந்தியாவை அதிரவைத்த கடத்தல்! குஜராத்தில் சிக்கிய கோடிக்கணக்கு மதிப்பிலான போதைப்பொருள் - நடந்தது என்ன?

கடந்த 30 நாட்களில் குஜராத்தில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது.

Drug Seized: கடந்த 30 நாட்களில் குஜராத்தில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. 

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான போதைப்பொருள்கள், குஜராத் வழியாகவும் பஞ்சாப் வழியாகவும்தான் இந்தியாவுக்குள் எடுத்து வரப்படுகிறது. எனவே, எல்லைப்பகுதிகள் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்:

இந்த நிலையில், குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் இந்திய கடற்படை அதிகாரிகள் நேற்று போர்பந்தரில் இருந்து 350 கி.மீ தூரம் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்நத்வர்களை பிடித்தனர். அவர்கள் வந்த படகில்  அதிகாரிகள் சோதனையிட்டபோது பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கண்டெடுக்கப்பட்டது.  இதனை அடுத்து, பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பாகிஸ்தான் படகைப் பயன்படுத்தி டெல்லி மற்றும் பஞ்சாபிற்கு தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை கடத்த முயன்றனர் என்பது தெரியவந்துள்ளது.  சுமார் 80 கிலோ போதைப் பொருளுடன், படகை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

30 நாட்களில் இரண்டாவது முறை:

கடந்த 30 நாட்களில் குஜராத்தில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி  குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.  

அந்த சோதனையில், 3,089 கிலோ சரஸ் (Charas) என்ற போதைப்பொருள், 158 கிலோ மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) மற்றும் 25 கிலோ மார்பின் (Morphine) ஆகியவற்றை கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட கப்பலில் இருந்தவர்கள் 5 பேர் இருந்ததாகவும், அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

IPS officers Transfer: நெருங்கும் தேர்தல்.. 13 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

தலைப்பு செய்திகள்

ஆகஸ்ட் 26 காலை முக்கிய செய்திகள்: தமிழகத்தில் இன்று நடந்த முக்கிய செய்திகள் என்னென்ன?
ஆகஸ்ட் 26 காலை முக்கிய செய்திகள்: தமிழகத்தில் இன்று நடந்த முக்கிய செய்திகள் என்னென்ன?
Russia India Ties: நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
இனி ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடி இதை பாருங்க: யுபிஐ பயன்பாட்டில் வெளியான பரபரப்பு தகவல்!
இனி ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடி இதை பாருங்க: யுபிஐ பயன்பாட்டில் வெளியான பரபரப்பு தகவல்!
இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறை: உலக நாடுகளை வியக்க வைக்கும் அதிவேக மேஜிக்!
இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறை: உலக நாடுகளை வியக்க வைக்கும் அதிவேக மேஜிக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK To TVK : தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்.! அறிகுறிகள் என்ன.? பொது சுகாதாரத்துறை அலர்ட்
தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்.! அறிகுறிகள் என்ன.? பொது சுகாதாரத்துறை அலர்ட்
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Gold and silver rate today : ஓணம் பண்டிகையில் தங்கம் விலையில் ஜாக்பாட்டா.!! இன்று தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
ஓணம் பண்டிகையில் தங்கம் விலையில் ஜாக்பாட்டா.!! இன்று தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Embed widget