Marriage : இந்தியாவில் 30% பெண்களுக்கு இத்தனை வயதுக்கு முன்பே திருமணம்.. இந்த மாநிலம்தான் டாப்.. அதிரவைக்கும் புள்ளிவிவரம்..
மேற்கு வங்கத்தில் சராசரியாக 50.2 விழுக்காடு பெண்களும் ஜார்க்கண்டில் 48.8 விழுக்காடு பெண்களும் 21 வயதுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கின்றனர்.
![Marriage : இந்தியாவில் 30% பெண்களுக்கு இத்தனை வயதுக்கு முன்பே திருமணம்.. இந்த மாநிலம்தான் டாப்.. அதிரவைக்கும் புள்ளிவிவரம்.. 30 percent of Women Get Married Before 21 in India West Bengal at Top Marriage : இந்தியாவில் 30% பெண்களுக்கு இத்தனை வயதுக்கு முன்பே திருமணம்.. இந்த மாநிலம்தான் டாப்.. அதிரவைக்கும் புள்ளிவிவரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/30/70909fc10888c5450c9e7e15ae19b2e61664520608526574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 30 விழுக்காடு பெண்கள் 21 வயதை எட்டும் திருமண வாழ்க்கையில் அடியெடுத்துவைத்து விடுகின்றனர் எனும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-இல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் இந்த சட்டத்துக்கு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள், எதிர்க்கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்சமயம் இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 18ஆகவும், ஆண்களுக்கு 21ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மையான பெண்கள் தாங்கள் 21 வயதை எட்டும் முன்பே திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது
மேற்கு வங்கத்தில் சராசரியாக 50.2 விழுக்காடு பெண்களும் ஜார்க்கண்டில் 48.8 விழுக்காடு பெண்களும் 21 வயதுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டுள்ளனர். டெல்லியில் 15.5 விழுக்காடு பெண்கள் 21 வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 30 விழுக்காடு பெண்கள் தங்கள் 21 வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும் இந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரில் 21 வயதை எட்டும் முன் திருமணம் செய்துகொண்ட பெண்கள் 8.2 விழுக்காடாக உள்ளனர். இங்கு திருமணத்துக்கான அதிகபட்ச சராசரி வயது (Highest mean age of marriage) 26ஆக உள்ளது. பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் பெண்களின் திருமணத்துக்கான அதிகபட்ச சராசரி வயது 24.4ஆக இருக்கிறது. இந்த விகிதம் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 21 ஆகவும், ஒடிசாவில் 22ஆகவும் உள்ளது.
தவிர அரசின் இந்த புள்ளிவிபரங்களின்படி கடந்த 2020ஆம் ஆண்டில் கேரளாவில் 18 வயதுக்குட்பட்ட முன்னர் திருமணம் செய்துகொண்ட பெண்கள் எவருமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கேரளா, பீகார் மாநிலங்களில் 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை 72.6 விழுக்காடாகவும் உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)