மேலும் அறிய

”2024 இல் மீண்டும் மோடிதான் “ - ஜெர்மெனி வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

”இந்த  போரில் யாரும் வெல்லப்போவது கிடையாது . எல்லோருக்குமே இது இழப்புதான்”

பிரதமர் மோடி தற்போது வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ளார். இந்த ஆண்டின் முதல் சுற்றுப்பயணத்தை நேற்று (மே 2 ) தொடங்கிய பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடுகளான ஜெர்மெனி, டென்மார்க் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ளார். முதற்கட்டமாக நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து  ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு சென்ற பிரதமர் மோடி , அந்நாட்டு அதிபர் Olaf Scholz சந்தித்து பேசினார். அதன் பிறகு  இந்தியா - ஜெர்மெனி இடையேயான பசுமை மற்றும் நீடித்த எரிசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் நரேந்திர மோடியும், ஜெர்மெனி பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஸும் கையெழுத்திட்டனர். இந்த சந்திப்பிற்கு தலைநகர் பெர்லிங்கில் கிட்டத்தட 2,000 இந்தியர்கள் அடங்கிய கூட்டத்தில் மோடி உரையாற்றினார். 

”2024 இல் மீண்டும் மோடிதான் “ - ஜெர்மெனி வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
அப்போது அங்கிருந்த இந்தியர்கள் “வந்தே மாதரம் “, “பாரத் மாதாவிற்கு ஜே“ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக “ 2024, மோடிதான் மீண்டும் (2024, modi again ) என்னு கோஷத்தை எழுப்பி உற்சாக வரவேற்பை ஏற்படுத்தினர். வருகிற 2024 ஆம் ஆண்டு பிரதமரை தேர்வு செய்வதற்கான  லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனி வாழ் இந்தியர்கள்  மீண்டும் மோடியே தங்கள் பிரதமராக வர வேண்டும் என ஆராவாரம் செய்திருப்பது தற்போது இணையத்தில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மோடியின் சுற்றுப்பயணம் சில ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்களை உருவாக்கி கொடுத்திருப்பதுதான் இந்த ஆதரவிற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய மோடி , “ எனது நாட்டு குழந்தைகளை பெரிலிங்கில் சந்திப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.ஜெர்மெனியின் பல்வேறு நகரங்களில் இருந்து நீங்கள் இந்த கூட்டத்திற்காக வந்துருப்பது மகிழ்ச்சி” என தனது உரையை தொடங்கிய மோடி .... ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் குறித்தும் பேசினார். அதில் “ ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு அமைதிப்பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு. இந்த  போரில் யாரும் வெல்லப்போவது கிடையாது . எல்லோருக்குமே இது இழப்புதான். இந்தியா அமைதியையே விரும்புகிறது. உகரைனுக்கு இந்தியா உதவி வருகிறது. இந்த பிரச்சினை காரணமாக ஏழை , எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சா எண்ணை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது ” என்றார்.

”2024 இல் மீண்டும் மோடிதான் “ - ஜெர்மெனி வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
ஜெர்மெனி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று டென்மார் செல்லும் பிரதமர் மோடி, அங்கு முதற்கட்டமாக அதிபரை சந்திக்கவுள்ளார். அதன் பின்னர்  இந்திய - நர்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. பின்னர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்  அதிபர் மெக்ரானை சந்தித்து பேசிவிட்டு , நாளை மறுநாள் இந்தியா திரும்புவார் என தெரிகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget