மேலும் அறிய

Opposition on BJP: ராகுலுக்கு சிறை..விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பாஜக?.. உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட எதிர்க்கட்சிகள்

விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.

விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன. 14 கட்சிகள் சார்பிலான இந்த முறையீடு மீதான விசாரணை வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை:

2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, மோடி சமூகத்தை இழிவுபடுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த குஜராத் நீதிமன்றம், ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதேநேரம், அவருக்கு ஜாமின் வழங்கியதோடு, மேல்முறையீடு செய்யலாம் எனவும் வலியுறுத்தியது. முக்கிய எதிர்க்கட்சி தலைவராக கருதப்படும் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், பாஜக அரசின் செயல்பாடு தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

14 கட்சிகள் புகார்:

ஆலோசனையை தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் திமுக, ஆர்ஜேடி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரத் ராஷ்டிரா சமிதி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. குறிப்பிட்ட கட்சிகள் சார்பில் மூத்த வழக்கறிஞரான  அபிஷேக் சிங்வி, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் முறையிட்டார்.  அப்போது, சிபிஐ மற்றும்  அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை  பாஜக தலைமையிலான அரசு தவறாக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏவப்படுகிறது.  2014ம் ஆண்டு தேர்தலில் பாஜக வென்று மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகளால் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 95%, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரானது தான். அதோடு, வரைமுறையின்றி  எதிர்க்கட்சி தலைவர்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்கிறது. எனவே, புலனாய்வு அமைப்புகளின்  விசாரணையின் போது  கைதுக்கு முன்பு மற்றும் பின்பான நெறிமுறைகளை வரையறுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதையேற்ற சந்திரசூட் தலைமையிலான அமர்வு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மீதான விசாரணை வரும் ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என அறிவித்தது. 

மக்களவை முடக்கம்:

இதனிடையே, இன்று மக்களவை கூடியதுமே ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவைத்தலைவர் அமைதி காக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய பிறகும், உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால், அவை கூடிய சில நிமிடங்களிலேயே நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 12 மணிக்கு மீண்டும் அவை கூடியதும், ராகுல் காந்திக்கு மக்களவையில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் திங்கட்கிழமை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

எம்.பி. பதவியை இழந்தாரா ராகுல் காந்தி?

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் எந்தவொரு எம்.பி மற்றும் எம்.எல்.ஏவும் உடனடியாக தங்களது பதவியை இழந்துவிடுவர் என, உச்சநீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்த வகையில் ராகுல் காந்தியும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதால், தனது எம்.பி. பதவியை இழந்துவிட்டதாக சட்டவல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், மக்களவை செயலகத்தில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget