(Source: ECI/ABP News/ABP Majha)
Bus Accident: டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த தனியார் பேருந்து - 13 பேர் உயிரிழப்பு
மத்தியப்பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. அங்குள்ள குணா - அரோன் நெடுஞ்சாலை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
மத்தியப் பிரதேசத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. அங்குள்ள குணா - அரோன் நெடுஞ்சாலை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தானது எதிரே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
லாரியுடன் மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. உள்ளே இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலற தொடங்கினார். சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணித்த நிலையில் 13 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டது. உடனடியாக விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட குணா மாவட்ட ஆட்சியர் தருண் ரதி, காயமடைந்தவர்களுக்கு பெரிய அளவில் ஆபத்தில்லை, அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக என கூறினார். மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 என்பதையும் உறுதி செய்தார்.
அதேசமயம் லாரி, பேருந்து மோதி தீப்பிடித்த விபத்தில் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை நடத்தப்படும் எனவும் தருண் ரதி கூறினார். விபத்துக்கான உண்மையான காரணம் முழு விசாரணைக்கு பின் தெரிய வரும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் முதலமைச்சர் மோகன் யாதவ் ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும், சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: Vijayakanth: "விஜயகாந்துக்கு கொரோனா தொற்று” - வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை என தேமுதிக தகவல்