மேலும் அறிய
Advertisement
12 PM Headlines: தமிழ்நாடு முழுதும் களைகட்டிய பொங்கல் விழா.. நண்பகல் 12 மணி தலைப்புச்செய்திகள் இதோ..
12 PM Headlines: இன்று அதிகாலை முதல் மதியம் 12 மணிவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கும் வாழும் தமிழ்நாடு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகள் முட்டியதில் உரிமையாளர்கள் உள்பட 12 பேர் காயம்.
- தரணியெங்கும் வாழும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு அன்பு நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
- சென்னையில் 239 வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்
- ”பொங்கலுக்கு அரிசி பருப்பா கேட்டோம் அப்டேட்தானே கேட்டோம்” - நூதன முறையில் சூர்யா42 படத்தின் அப்டேட் கேட்டு மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
- அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
- பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததை கண்டித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 27ம் தேதி முதல் நடைபயணம் - நடிகை காயத்ரி ரகுராம் அதிரடி அறிவிப்பு
- பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம் தமிழ்நாடு பொது சுகாதார ஆராய்ச்சி சங்கத்தின் ஒரு பகுதியாக "TN நலம் 360" என்ற யூ டியூப் சேனலை உருவாக்க - அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
- பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியா:
- அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது.
- செகந்திரபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
- அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியத்துவம் பெறும்- அமர்த்தியா சென் கருத்து.
- கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் 17 ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
- மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைப் பிரதமர் மோடி சந்திக்கும் பரிக்ஷா பே சார்ச்சா ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.
உலகம்:
- நேபாளம் பொக்காரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளானது. மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
- எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த சீனா-பூடான் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளது.
- மியான்மரில் தேவாலயங்கள் மீது வான்தாக்குதல்; 5 பேர் பலி
- இலங்கைக்கு வரும் இந்தியர்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்: இந்திய தூதரகம் அறிவுரை
- சீனாவில் ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 60 ஆயிரம் பேர் பலி
விளையாட்டு:
- இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா.. கடைசி ஒருநாள் போட்டியில் இன்று மோதல்
- உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்.
- பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.
- ரிஷப் பண்ட் இந்தாண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion