J&K's Poonch : நிலைத்தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து ! - 11 பேர் உயிரிழப்பு ! 25 பேர் படுகாயம் !
இதே போல இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரேரி நல்லா அருகே பேருந்து ஒன்று நிலைத்தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சாவ்ஜியானில் இருந்து மண்டிக்கு சென்று கொண்டிருந்த போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து , அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் .25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Jammu & Kashmir | A mini-bus accident occurred in the Sawjian area of Poonch. Army's rescue operation is underway; 9 deaths reported, many injured shifted to a hospital in Mandi. Further details awaited: Mandi Tehsildar Shehzad Latif pic.twitter.com/NMFhtuK5lj
— ANI (@ANI) September 14, 2022
சம்பவம் நடந்த உடனேயே அங்கிருந்த உள்ளூர்வாசிகள் மீட்பு பணியில் இறங்க துவங்கியுள்ளனர். பின்னர் போலீசார் மற்றும் ராணுவத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் இணைந்து மீட்பு பணியை தீவிரமாக்கியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Saddened by loss of lives due to a road accident in Sawjian, Poonch. Condolences to bereaved families. May the injured recover soon. Rs. 5 lakh would be given to the next of kin of deceased. Directed Police and Civil authorities to provide best possible treatment to the injured.
— Office of LG J&K (@OfficeOfLGJandK) September 14, 2022
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “பூஞ்ச், சாவ்ஜியனில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் . இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். காவல்துறை மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு சிறந்த உதவிகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான சிகிச்சை அளிக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதே போல இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "பூஞ்ச் மாநிலம் சாவ்ஜியனில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
The loss of lives in a tragic road accident in Sawjian, Poonch is deeply distressing. My thoughts and prayers are with the bereaved families. I wish speedy recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) September 14, 2022
இதே போல ஜம்மு கஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, "பூஞ்சில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் “ என தெரிவித்துள்ளார் .