World Music Day 2024: கவலை, மன அழுத்தத்தை ஓட ஓட விரட்டும் பொக்கிஷம் இசை - இன்று உலக இசை தினம்
மன இறுக்கத்தை கலைந்து ஓட வைத்து அமைதியையும் உற்சாகத்தையும் தரும் அறிய பொக்கிஷம் இசை.
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் வரம் ஆகும். என்ற பாடல் வரிகள் இன்றளவும் காற்றாலைகளில் வழியாக நாம் காது மடல்களில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது.
இப்படி இறையின் வடிவமாக போற்றப்படும் ஒப்பற்ற இசை என்பது உலகின் பொது மொழியாக திகழ்கிறது. நாடு, இனம், மொழி கடந்து இதயங்களை ஒன்றிணைக்கிறது. இயற்கையின் ஒலிகளாய் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு அபூர்வமே இசை. காதல், வீரம், கோபம், பாவம், விரதம், துள்ளல், என்று இசையின் ஒவ்வொரு வடிவமும் மனித வாழ்வில் இரண்டறக் கலந்து நிற்கிறது.
இப்படி தித்திக்கும் இசையின் படிவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. பசுமையான அதன் நினைவுகள் என்றென்றும் அழியாத கோலங்களை நெஞ்சங்களில் நிரல் அடித்து கொண்டிருக்கிறது.
இந்த வகையில் இணையற்ற இசையின் மகத்துவத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி இன்று உலக இசை தினம் அனுசரிக்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இசை அமைப்பாளர்கள் பிரான்சில் கூடினர். அந்நாளே உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது.
இசை என்பது பொழுதுபோக்கின் பெரும் அம்சம் என்பது நமது மனங்களில் பதிந்த ஒன்றாக நிற்கிறது. ஆனால் அதையும் தாண்டி இசை என்பது மக்களின் கவலை தீர்க்கும் மாமருந்து குறிப்பாக பெண்களின் மனநிலை மாற்றத்திற்கு இசை பெரும் பங்கு வகிக்கிறது. சீரற்ற என்ன ஓட்டம், அதீத சிந்தனை, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்ற உணர்வு சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு வழிவகுக்கிறது என்றனர் ஆய்வாளர்கள்.
இந்த உலகில் மனிதர்களை தன் வசம் இழுத்து ஒருமுகப்படுத்தும் ஒப்பற்ற தன்மை இசைக்கு உள்ளது. இதேபோல் இசையை வெளிப்படுத்தும் வாத்திய கருவிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது அதன் அறிவுகள் சுற்றி இருக்கக்கூடிய சூழலை பல வகைகளாக மாற்றி அமைக்கும் தன்மை கொண்டது.
கோபத்தை குறைக்கவும், பசியை தூண்டவும் கூட இசை தெரபி என்னும் ஒரு நூதன மருத்துவம் வரை வகிக்கிறது. மனநலம் குன்றியவர்கள், மன அழுத்தம் கொண்ட குழந்தைகள், பல்வேறு பிரச்சனைகளுடன் வாழும் முதியவர்கள், வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டத்தை சிறைகளில் தொலைத்த கைதிகள் போன்றவர்களுக்கு கூட இசை என்பது அமைதியும் உற்சாகத்தையும் தருகிறது.
சமீபத்தில் செர்பியாவில் முதன்முறையாக மாரடைப்பு ஏற்பட்ட 350 பேரை இசைத்தெறபி என்னும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து தினமும் 30 நிமிடங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேட்டு வந்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது. என்று அதில் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஏழு ஆண்டுகள் அவர்களை கண்காணித்து இந்த ஆய்வு முடிவை உறுதிப்படுத்தி உள்ளனர்.
சோதனை முடிவில் நெஞ்சுவலி, பதற்றம், மாரடைப்பு போன்ற எந்த பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படவில்லை என்பதும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இசை கேட்கும் போது புத்துணர்ச்சி அதிகரிக்கிறது மூளைக்குள் உற்சாகம் அளிக்கிறது. நமக்கு தெரிந்த மொழியில் எழுதப்பட்ட இசை பாடல்களை மனம் விரும்பி கேட்கும் போது நமது கற்பனை திறனும் அதிகரிக்கிறது. நினைவாற்றல் மேம்படவும் இசை துணை நிற்கிறது. மொத்தத்தில் எப்படிப்பட்ட மன அழுத்தத்தில் இருந்தும் மனிதனை விடுபடச் செய்யவும் வல்லமை இசைக்கு உண்டு என்பதே நிதர்சனமான உண்மை.
3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இசை
3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் தலைதிறந்தது தமிழ் இசை. இதற்கு பல்வேறு ஆதாரங்கள் இன்றளவும் நம்மிடையே உள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை கிளாசிக்கல் இசையே முதல் இசை வடிவம் என்று கூறப்படுகிறது . நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் தெலுங்கில் கீர்த்தனைகள் பாடப்பட்டது. தியாகராயர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் போன்றவர்கள் தெலுங்கிலும் வடமொழியிலும் கீர்த்தனைகளை இயற்றினர். ஆனால் அதற்கு முன்பே தமிழ் இசை மும்மூர்த்திகளான முத்து தாண்டவர், அருணாசல கவிராயர், மாரிமுத்து பிள்ளை ஆகியோர் தமிழில் இசை பாடல்களை பாடி பெருமை சேர்த்தனர் என்பது நமக்கு பெருமிதம்.