தர்மபுரியில் 8000 பேருக்கு கால்நடை வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி : அசத்தும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளுக்கு தரமான ஆடு, மாடு, கோழி வாங்க வழிகாட்டுதல்
தர்மபுரி மாவட்டத்தில் 70 சதவீதம் விவசாயமும், கால்நடை வளர்ப்பு, பிரதான தொழிலாக உள்ளது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம், குண்டல்பட்டியில் மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் பிரதானமாக கொண்டது தர்மபுரி மாவட்டம்
தர்மபுரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி ஆராய்ச்சி மையத்தில் நடபாண்டில் 8000 பேருக்கு கால்நடைகள் வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் 70% விவசாயமும், கால்நடை வளர்ப்பும், பால் உற்பத்தியும் பிரதான தொழிலாக உள்ளது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் குண்டல்பட்டியில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
தரமான ஆடு மாடுகளை வாங்க விவசாயிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் வழிகாட்டுதல்
இங்கு நாள்தோறும் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளான ஆடு, கோழி, ஆகியவற்றை தரமாக வாங்க முறையாக வளர்த்த தேவையான வழிகாட்டுதல்கள் அது தொடர்பான பயிற்சிகள், கையேடுகள், கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் பாதுகாக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி முதல் தொடங்கிய பயிற்சி
கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவைச் சார்ந்த 33 பேருக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி, ஆடுகளுக்கு பயிற்சி 33 பேருக்கு, கால்நடை வளர்ப்பு பயிற்சி 20 பேருக்கும், வேளாண் தோட்டக்கலை தொழில் முனைவோருக்கு தொழிற்சாலை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த பயிற்சி 15 பேருக்கும் அரசின் திட்டங்களை பெறுவது குறித்த பயிற்சி, 27 பேருக்கும் கோழி வளர்ப்பு பயிற்சி, 52 பேருக்கும் என மொத்தம் 180 பேருக்கு வளாகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அட்மா திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதத்தில் வேளாண் விஞ்ஞானிகளிடம் கூடிய கலந்துரையாடல் பயிற்சி 40 பேருக்கு அளிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் லாபகரமான கால்நடைகளுக்கு பயிற்சி 25 விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
பால் உற்பத்தியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 7535 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு பயிற்சி மற்றும் லாபகரமான ஆடு வளர்ப்பு பயிற்சி, தீவன மேலாண்மை பயிற்சி 70 பேருக்கு வழங்கப்பட்டது. திருச்சியில் கருப்பு ஆடு வளர்ப்பு குறித்து கண்காட்சி கோமாரி நோய் தடுப்பூசி துவக்க விழா பல்கலைக்கழக தொழில்நுட்பம் குறித்து கண்காட்சி நடத்தப்பட்டது.
இது குறித்து குண்டல்பட்டி கால்நடை மருத்துவர் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவரும் உதவி பேராசிரியருமான கண்ணதாசன் கூறுகையில்:-
குண்டல்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தினந்தோறும் விவசாயிகள், மாணவர்கள், மகளிர்க்கு பல்வேறு விதமான பயிற்சிகள் அளித்து வருகிறோம். கடந்த ஓராண்டில் மட்டும் 22 கால்நடை செயல் விளக்கங்கள் 12 கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிருக்கு பயிற்சிகள்
மேலும் ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு பல்வேறு விதமான பயிற்சிகள் அளித்து வருகிறோம் கடந்த ஓராண்டில் பெண்கள் மட்டும் 22 கள செயல் விளக்கங்கள் 12 கண்காட்சிகள், மேலும் ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் 180 பேருக்கு, அம்மா திட்டத்தின் கீழ் 93 பேருக்கும், திறன் மேம்பாட்டு பயிற்சியாக 7920பேருக்கும், ஆத்மா பண்ணை பயிற்சிக்காக 308 பேருக்கும் கல்லூரி மாணவர்கள் 84 பேருக்கும் கால்நடை மருத்துவர்கள் 70 பேருக்கும் என மொத்தம் 8654 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது என தெரிவித்தார்.