மேலும் அறிய

பூமியில் உள்ள மொத்த நீரில் ஒரு சதவீதம் மட்டுமே சுத்தமானது; மாசு கட்டுப்பாட்டால் நிகழும் அபாயம் - ஆய்வாளர்கள் எச்சரிக்கை

பூமியில் உள்ள மொத்த நீரில் ஒரு சதவீதம் மட்டுமே சுத்தமானது மாசு கட்டுப்பாட்டால் நிகழும் அபாயம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதனால் காற்று, கனிமங்கள், தாவரங்கள், மண்ணில் வாழும் உயிரினங்கள், வனவிலங்குகள் போன்றவை நாம் வாழும் பூமியின் இயற்கை வளங்கள் என்ற பட்டியலில் உள்ளது.  இவற்றை அளிப்பது என்பது நம்மை நாமே அளித்துக்கொள்வதற்கு சமமானது. 

எனவே அரிய பொக்கிஷங்களான இயற்கை வளங்களை சிதைக்காமல் பாதுகாக்க வேண்டும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அவற்றைக் கொண்டு சேர்த்து வளமான பூமியை உருவாக்க வேண்டியது அவசியம்.

இதை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 28-ஆம் தேதி உலக இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இதையொட்டி இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அறிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். 

பிரபஞ்சத்தில் எண்ணற்ற கிரகங்கள் உள்ளது. ஆனால் மனிதர்களும் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக இந்த பூமி மட்டுமே உள்ளது. அதற்கு காரணமாக இருப்பது பூமியின் இயற்கை வளங்கள் ஆனால் சமீப ஆண்டுகளாக விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ச்சியில் உச்சம் தொட்டு வருகிறது. இதன் காரணமாக மனித வாழ்க்கையும் நவீனமயமாகி வருகிறது.

நவீன வாழ்க்கையில் இயற்கை வளங்களை மனிதர்கள் அழிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் பசுமை காடுகள், மரங்கள், உயிரினங்கள், விளைநிலங்கள் நீர்நிலைகள் போன்றவை தொடர்ந்து சீரழித்து வருகிறோம்.

பூமியில் உள்ள மொத்த நீரில் ஒரு சதவீதம் மட்டுமே சுத்தமானது; மாசு கட்டுப்பாட்டால் நிகழும் அபாயம் -  ஆய்வாளர்கள் எச்சரிக்கை

இதனால் இயற்கை வளங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரத்தில் இதன் எதிரொலியாக இயற்கை சீற்றங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையில் மாறுபாடுகள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் 1948- ஆம் ஆண்டு உலகளாவிய இயற்கை பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது.

இயற்கை வளங்களை பாதுகாத்தால் இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை இந்த சங்கத்தின் பிரதான நோக்கமாகும். இதை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் உலக இயற்கை பாதுகாப்பு தினமும் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர்
 ஆய்வாளர்கள்.

இந்த நிலையில் தற்போதைய சூழலில் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு அவசியம் குறித்து இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:- 

நீரின்றி அமையாது உலகு என்பது ஒரு ஒப்பற்ற பொன்மொழி.  இந்த வகையில் உலக உயிர்கள் அனைத்திற்கும் வாழ்வாதாரமாக இருக்கும் நீர் தான் இயற்கை வளங்களில் முதன்மையானது. பூமியில் உள்ள மொத்த நீரில் ஒரு சதவீதம் மட்டுமே  மனிதர்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.

 அதாவது குடியிருப்பதற்கு ஏற்ற நன்னீராக உள்ளது. மீதமுள்ள நீரானது மாசு அல்லது இயற்கை சீரழிவுகளால் தற்போது உப்பு அல்லது உறைந்த நீராகவே காட்சி அளிக்கிறது. எனவே இயற்கை வளங்களின் தாயாக விளங்கும் தண்ணீரை நாம் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் மழை நீரை பாசனத்திற்கு இதர தேவைக்காகவும் பயன்படுத்தலாம். மழைநீர் சேகரிப்பை நாம் அதிகரிக்கும்போது நீர் நிலைகளில் இருந்து தண்ணீரை வீணாக்குவது குறையும்

இதனால் நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரிக்கும் இதேபோல் மரங்களை நடுவதும் ஒரு உன்னதமான அணுகுமுறை ஆகும். இது மண் அரிப்பு சம்பவங்களை வீட்டுக்கு வீடு பெட்ரோல் டீசல் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது.

சாலைகள் தோறும் கார்பன் டை ஆக்சைடு புகையை காட்டியவாறு இந்த வாகனங்கள் சீறிப் பாய்கின்றன. இந்த வாகனங்களில் இருந்து மேலே செல்லும் கரியமில வாயு காற்றை மாசப்படுத்துவதோடு ஓசோன் படத்தை  ஓட்டையிடுகிறது. இதன் காரணமாகவே முறையற்ற மழைப்பொழிவு ஏற்படுகிறது.இந்த வகையில் நீரை ஆதாரமாகக் கொண்ட காடுகள், ஆறுகள், மலை, மண், காற்று என்று அனைத்தும் நமக்கு இயற்கை கொடுத்த அரிய வரங்கள். அவற்றை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் சிதைக்காமல் அடுத்தடுத்த தலைமுறை  நாம் விட்டு செல்ல வேண்டும். குறிப்பாக தொழில்நுட்பம் பொருட்செல்வத்தை விட இயற்கை வளங்களும் ஆரோக்கியமான சூழல்களும் தான் நமது சந்ததிக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டிய பெரும் பொக்கிஷமாகும். இயற்கை வள பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் தலையாய கடமையாக இருக்க வேண்டும் இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Seeman:
"திமிர் பிடித்த சீமானே.. பெண்கள்னா கேவலமா..?" பேட்டியால் கெட்ட சீமான்
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறைSexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Seeman:
"திமிர் பிடித்த சீமானே.. பெண்கள்னா கேவலமா..?" பேட்டியால் கெட்ட சீமான்
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Health Ministry Warning: இயர்ஃபோன், ஹெட்ஃபோன்களால் ஆபத்து.. சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
இயர்ஃபோன், ஹெட்ஃபோன்களால் ஆபத்து.. சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
Embed widget