மேலும் அறிய

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வினாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக உயர்வு.

பிலிகுண்டுளுக்கு12,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக நீர் வரத்து அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் நீர் திறப்பது அதிகரிப்பால், காவிரி ஆற்றில்  நீர்வரத்து மேலும் அதிகரித்து, வினாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக உயர்வு.


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வினாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக உயர்வு.

மீண்டும் அதிகரித்த காவிரி நீர்

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை இயற்றியது. இதனால் இரண்டு அணைகளில் இருந்தும் குவளை நீராக தமிழகத்திற்கு வினாடிக்கு இரண்டு புள்ளி 50 லட்சம் கன அடி திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைபுரண்டு ஓடியது.  

இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு முற்றிலுமாக குறைக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. மேலும் கடந்த 10 நாட்களாக காவிரி ஆற்றில் தமிழக பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4000 கன அடியாக இருந்து வந்தது.

 இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு வினாடிக்கு நேற்று காலை 12,000 கன அடகயாகவும், மாலை வினாடிக்கே  21,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டது. இந்த நிலையில்  கனமழை மற்றும் நீர் திறப்பு அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து கடந்த 10 நாட்களுக்குப் பிறகு, இன்று காலை அதிகரித்து,  வினாடிக்கு 4000 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக உயர்ந்தது.  

மேலும் நீர்திறப்பு அதிகரிப்பால், தொடர்ந்து மாலை மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.  இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வாய்ப்புள்ளது.

தொடர்ந்து பெய்யும் மழை நீர் வளர்த்து அதிகரிக்க வாய்ப்பு

மேலும் தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேப்போல் மேட்டூர் அணை நிரம்பி இருப்பதால், ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் தேங்கி வருகிறது. தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் கூடுதலாக திறக்க வாய்ப்புள்ளது. இதனால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது என மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

காவிரி கரையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகம்

இதனால் காவிரி கரையோரம் மாவட்ட நிர்வாகம் மீண்டும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. காவிரி ஆற்றில் நீர்திறப்பு அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு 40 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருந்து. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது‌. தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு ஒகேனக்கல்லில் தடை விதிக்க வாய்ப்புள்ளது.

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?
தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget