மேலும் அறிய

போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் வழக்கில் திடுக்கிடும் உண்மைகள்.. மேலும் ஒருவர் கைது.

போலி முகாம் குறித்து தகவல்களை மறைத்து, போலி பயிற்சியாளர் சிவராமனுக்கு உதவியது கண்டுபிடிப்பு-கிருஷ்ணகிரி என்சிசி ஒருங்கிணைப்பாளர் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவி, நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். 

போலி என்சிசி பயிற்சியாளர் வழக்கில் திடுக்கிடும் உண்மைகள்

 மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி தாளாளர் முதல்வர் உள்பட மொத்தம் 13 பேர் பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் சிகிச்சை பலனின்றி கடந்த 23ஆம் தேதி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் உத்தரவின் பெயரில் ஐஜி பவானிஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு மற்றும் சமூக நலத்துறை செயலாளர் ஜெய் ஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

என்சிசி போலீஸ் பயிற்சியாளர் மீண்டும் ஒருவர் கைது

இந்த விசாரணையில் வேறு ஒரு தனியார் பள்ளியில் சிவராமநால் நடத்தப்பட்ட போலி முகாமில் கலந்து கொண்ட 14 வயது மாணவியும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பள்ளியின் பெண் முதல்வரும் கைது செய்யப்பட்டார். 

 இதனால் கிருஷ்ணகிரி அருகே இரு பள்ளிகளில் நடைபெற்ற போலி என்.சி.சி பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிவராமன் மட்டும் உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கில் விசாரணை நடத்தும் ஐஜி பவனேஸ்வரி

இந்த வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி பாவனீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசார் போலி பயிற்சியாளர் சிவராமனுக்கு பயிற்சி முகாம் நடத்த உதவியுடன் போலி முகாமில் கலந்து கொண்டதாக  காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்சிசி அலுவலரும், கிருஷ்ணகிரி மாவட்ட என்.சி.சி ஒருங்கிணைப்பாளருமான, கோபு என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

 இந்த விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளில் உள்ள என்.சி.சி அலுவலர்கள் மற்றும் என்.சி.சி முகாம்கள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய கோபுவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.   

ஆனால் போலி பயிற்சியாளராக சிவராமன் இருப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபு உதவி செய்தது போலி முகாம் குறித்த தகவல்களை மறைத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட என். சி .சி ஒருங்கிணைப்பாளர் கோபுவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். மேலும் சிவராமன் நடத்திய போலி முகாம்கள் குறித்து தெரிந்தும் மாவட்ட என்.சி.சி ஒருங்கிணைப்பாளர் கோபு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார்.

 குறிப்பாக ஒரு சில தனியார் பள்ளிகளில் நடந்த போலி முகாம்களில் கோபுவும் கலந்து கொண்டது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலி என்.சி.சி முகாம் நடத்திவருக்கு உதவியதாக அரசு பள்ளி என்.சி.சி பயிற்சியாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதேபோல் இந்த முகாம் நடத்திய போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமனுக்கு உதவியது மற்றும்  தொடர்பு இருப்பதாக பல பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget