மேலும் அறிய

தொப்பூர் கணவாய் பகுதியில் விரைவில் உயர் மட்ட சாலை அமைக்கும் பணி - நேரில் ஆய்வு மேற்கொண்ட

தொப்பூர் கட்டமேடு பகுதியிலிருந்து சேலம் மாவட்டம் எல்லை பகுதி வரை சுமார் 6.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் 775 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

தொப்பூர் கணவாய் பகுதியில் உயர் மட்ட சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதையடுத்து அப்பகுதியில் அதிகாரிகளுடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.
 
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கக்கூடிய மிக முக்கியமான சாலை. இச்சாலையில் 8 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதி மற்றும் வளைவுகளான சாலையில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படுவதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டு மரணச்சாலையாக மாறி உள்ளது. இந்த கணவாய் பகுதியில் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் அதற்கான நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் மத்திய அரசிடம் இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும், இது தொடர்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

தொப்பூர் கணவாய் பகுதியில் விரைவில் உயர் மட்ட சாலை அமைக்கும் பணி - நேரில் ஆய்வு மேற்கொண்ட
 
இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் அப்பகுதியில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க அனுமதி அளித்தது.  இதில் தொப்பூர் கட்டமேடு பகுதியிலிருந்து சேலம் மாவட்டம் எல்லை பகுதி வரை சுமார் 6.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் 775 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து மேம்பாலம் அமையக்கூடிய பகுதிகளை தருமபுரி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட பாலம் அமையவுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சில மாற்றங்கள் செய்ய முடியுமா? அவ்வாறு மாற்றங்கள் செய்ய வேண்டிய இடங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் உயர்மட்ட பாலம் அமைக்க சுமார் மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால், அதற்குள் விபத்துக்களை தடுக்கும் வகையில், அதிக அளவு விபத்துகள் ஏற்படும் சுமார் 800 மீட்டர் நீளமுள்ள சாலையை மாற்றி அமைத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். 

தொப்பூர் கணவாய் பகுதியில் விரைவில் உயர் மட்ட சாலை அமைக்கும் பணி - நேரில் ஆய்வு மேற்கொண்ட
 
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர், தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூரில் உள்ள கணவாய் பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதும், தொடர்கதையாக இருந்து வந்த நிலையில், அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதில், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் புதிய உயர்மட்ட பாலம், தொப்பூர் கணவாய் பகுதியில் அமைக்க அனுமதி அளித்து, சுமார் 775 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து இன்று பணிகள் நடைபெறும் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வு மேற்கொண்டு சில கோரிக்கைகளையும், அவர்களிடம் வைத்துள்ளதாகவும் இந்த பாலம் அமைக்கும் பணி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தொடங்கப்படும் என தெரிவித்தார்.  இந்த ஆய்வின்  போது தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் திட்ட இயக்குனர் சீனிவாசலு, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் சாலை பராமரிப்பு குழு மேலாளர் அருண் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs CSK Match Highlights: இறுதிவரை களத்தில் போராடிய தோனி; ஆனாலும் CSK தோல்வி; அப்செட்டில் ரசிகர்கள்!
GT vs CSK Match Highlights: இறுதிவரை களத்தில் போராடிய தோனி; ஆனாலும் CSK தோல்வி; அப்செட்டில் ரசிகர்கள்!
GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!
GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!
GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPK Jayakumar Death | பெண்ணுடன்  தொடர்பு? போலீஸ் ரேடாரில் மகன்கள்..வெளியான பகீர் தகவல்!Petrol Bunk Theft | பெட்ரோல் பங்கில் வழிப்பறி..அரிவாள் காட்டி மிரட்டல்!பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!10th Results | மாநிலத்தில் முதலிடம் பெற்ற கூலித் தொழிலாளியின் மகள்! ’’நான் IAS ஆவேன்’’Mohan Press Meet | GOAT அப்டேட்! போட்டுடைத்த மோகன்..கலகல PRESS MEET

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs CSK Match Highlights: இறுதிவரை களத்தில் போராடிய தோனி; ஆனாலும் CSK தோல்வி; அப்செட்டில் ரசிகர்கள்!
GT vs CSK Match Highlights: இறுதிவரை களத்தில் போராடிய தோனி; ஆனாலும் CSK தோல்வி; அப்செட்டில் ரசிகர்கள்!
GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!
GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!
GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!
"பயில்வான் ரங்கநாதன் - ஷகிலா மோதல் விவகாரம்" அஜர்பைஜான் தூதர் ஆதங்கத்துடன் சொன்ன அறிவுரை!
WhatsApp: உங்க வாட்ஸ் அப் மாறியிருக்கிறதா? புதிய அப்டேட் வந்தாச்சு - என்னன்னு தெரியுமா?
WhatsApp: உங்க வாட்ஸ் அப் மாறியிருக்கிறதா? புதிய அப்டேட் வந்தாச்சு - என்னன்னு தெரியுமா?
MS Dhoni: கடைசியாக களம் இறங்கும் தோனி..காரணம் சொன்ன ஸ்டீபன் பிளம்மிங்!விவரம் உள்ளே!
MS Dhoni: கடைசியாக களம் இறங்கும் தோனி..காரணம் சொன்ன ஸ்டீபன் பிளம்மிங்!விவரம் உள்ளே!
Star Movie Box Office: முதல் நாளிலேயே எகிறும் வசூல்.. சொந்த ஊரில் கலக்கும் கவின்: ஸ்டார் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!
Star Movie Box Office: முதல் நாளிலேயே எகிறும் வசூல்.. சொந்த ஊரில் கலக்கும் கவின்: ஸ்டார் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!
Embed widget