Dharmapuri Power Shutdown : தர்மபுரி மாவட்டத்தில் நாளை (05.08.2025) மின்சாரம் நிறுத்தம்! முக்கிய பகுதிகள் இதோ!
Dharmapuri power shutdown: தர்மபுரி மாவட்டத்தில் நாளை 05.08.2025 மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை 05.08.2025 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என தருமபுரி செயற்பொறியாளா் (இயக்கமும் பராமரிப்பும்) தெரிவித்துள்ளார். பொதுவாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒரு குறிப்பிட்ட நாளில் மேற்கொள்ளப்படும், அதனால் அந்த நாளில் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்படலாம். மின்வாரியத்தின் அறிவிப்புகளைப் பின்பற்றுவது நல்லது.
தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின்நிலையம்
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதிகோன்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், அளே தருமபுரி, கடகத்தூா், கொளகத்தூா், குண்டல்பட்டி, ஏ.ஜெட்டிஅள்ளி, ஏ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, ஏ.கொல்லஅள்ளி, குளியனூா், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூா், சோலைக்கொட்டாய், மூக்கனூா், கொட்டாவூா், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கனஅள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















