மேலும் அறிய
PMK: அபய ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சௌமியா அன்புமணி
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி அபய ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சாமி தரிசனம்.

செளமியா அன்புமணி கோயிலில் சாமி தரிசனம்
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சௌமியா அன்புமணி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் பாமக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். இதனை தொடர்ந்து தருமபுரியில் கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தருமபுரி நகர பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் திருக்கோவில் சென்று சிறப்பு பூஜை செய்து, வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயில் முழுவதும் சுற்றி வந்து வழிபாடு நடத்தினார்.
சௌமியா அன்புமணி சொத்து மதிப்பு
பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி, தனக்கு விவசாயம் சார்ந்த வருவாயாக ரூ.28 லட்சம், விவசாயம் சாராத வருவாயாக ரூ.1,54,04,070 கிடைப்பதாகவும், இவை தவிர, ரூ.20,71,840 மதிப்பிலான 25.90 கிலோ வெள்ளி பொருட்களும், ரூ.1,92,01,120 மதிப்பிலான 2, 927 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.1,64,38,835 மதிப்பிலான 151.5 கேரட் வைர நகைகள் ஆகியவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதில் சௌமியா பெயரில் வருவாய் மற்றும் நகைகள் என மொத்தம் ரூ.5,59,15,865 மதிப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சௌமியா மற்றும் அவரது குடும்பத்தார் பெயரில் அசையும், அசையா சொத்துக்கள், நகைகள் உள்ளிட்டவையாக ரூ.60,23,83,186 மதிப்பில் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்வேறு வகையில் ரூ. 9,15,40,738 கடன் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து வைத்திருப்பவர் சௌமியா அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















