மேலும் அறிய
Advertisement
36 ஆண்டுக்கு பின் சந்திப்பு..வகுப்பறையில் மீண்டும் மாணவர்களாக, ஆசிரியர்களாக - தருமபுரியில் நெகிழ்ச்சி
அதே வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்து தங்களது ஆசிரியர் பாடம் நடத்த மீண்டும் பள்ளிப் பருவத்திற்கு சென்றதால், முன்னாள் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பள்ளியில், 1987-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 36 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தனர். மீண்டும் தங்களது வகுப்பறையில் மாணவர்களாக அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்தியது, முன்னாள் மணவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1987ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களின் மூலமாக ஒன்றிணைந்தனர். இதனை அடுத்து மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு, அனைத்து மாணவர்கள் மற்றும் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுத்தனர். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி அன்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 36 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்துக் கொண்டனர். முன்னாள் மாணவர்கள் மட்டும் சந்தித்துக் கொண்டதில்லாமல் ஆசிரியர்களும் ஓய்வு பெற்ற நிலையில் ஆங்காங்கே பிரிந்து இருந்தனர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் ஆசிரியர்களும் சந்தித்துக் கொண்டனர். தொடர்ந்து தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர். அப்பொழுது மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த, அதே அறையில் மாணவர்கள் அமர்ந்து கொண்டு ஆசிரியர் பாடம் நடத்தினார். இதனால் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளி மாணவர்கள் ஆகினர். அதே வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்து தங்களது ஆசிரியர் பாடம் நடத்த மீண்டும் பள்ளிப் பருவத்திற்கு சென்றதால், முன்னாள் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள், தங்களது ஆசிரியர்களுக்கு அசைவ விருந்து பரிமாறினர். மேலும் மாணவர்களும் பள்ளி பருவத்தில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டது போல, ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக உணவு அருந்தினர். இதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் இந்த சந்திப்புகளை அடிக்கடி நிகழ்த்தி, நாம் படித்த பள்ளியின் தேவைகளை ஆசிரியர்களிடம் கேட்டு, செய்து கொடுக்க முன் வந்துள்ளனர். அதேபோல் இந்த பள்ளியில் நீட் தேர்வுக்கு தயாராகின்ற மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர் ஒருவர் சொந்த செலவில் பயிற்சி வகுப்புக்கான கட்டணம் செலுத்தி வருகிறார். 36 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், மீண்டும் வகுப்பறையில் அமர்ந்து மாணவர்களாக பாடம் கற்றது, ஆசிரியர், மாணவர்கள் மத்தியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion