மேலும் அறிய

ரூ.900 கோடியில ரோடு போட்டு என்னங்க புண்ணியம், கொஞ்சம் மழை வந்தாலே நடக்க முடியல

பாலக்கோடு அருகே புதிய நான்கு வழிச்சாலையில், முறையான திட்டமிடல் இல்லாததால், பாலத்திற்கடியில் தேங்கும் மழைநீர். மேடு பள்ளம் தெரியாமல் மழை நீரில் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள்.

தருமபுரி அதியமான்கோட்டை முதல் ராயக்கோட்டை வழியாக ஓசூர் வரை புதிய நான்கு வழிச்சாலை ரூ.899 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது. இதில் கடகத்தூர், அல்லியூர், புலிக்கரை, சோமனஹள்ளி, கர்த்தாரப்பட்டி, பாலக்கோடு என பல்வேறு இடங்களில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ஒப்படைக்கப்பட்டது‌. இந்நிலையில் புதிய நான்கு வழிச் சாலையில் மழைநீர், கழிவுநீர் செல்ல, அணுகு சாலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மழைக் காலங்களில் ஓசூர்-தருமபுரி புதிய சாலையில் பல்வேறு இடங்களில் பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதில் கர்த்தாரப்பட்டி-பாலக்கோடு செல்லும் பாலத்தின் கீழ் சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம், மேடு தெரியாமல் இருப்பதால், சிலர் கீழே விழுந்து காயமடையும் சூழல் இருந்து வருகிறது. அதேபோல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் மக்கள், விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள், இருசக்கர வாகனம், கார், லாரி, பேருந்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த தண்ணீர் வெளியேற முடியாமல் இருப்பதற்கு காரணம், பாலத்தின் அருகில் இருபுறமும் உள்ள கால்வாய் உயரமான பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தரைப்பகுதி தாழ்வாக இருப்பதால், கால்வாய் உயரமாக இருப்பதால், தண்ணீர் கழிவு நீர் கால்வாய் பகுதிக்கு செல்ல முடியாமல், தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து பலமுறை தருமபுரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை அடைகின்றனர். 

இதனால் பாலக்கோடு பகுதியில் சிறிது நேரம் மழை பெய்தாலும் கூட, கர்த்தாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரம்த்திற்குள்ளாகி வருகின்றனர். 

ரூ.900 கோடியில ரோடு போட்டு என்னங்க புண்ணியம், கொஞ்சம் மழை  வந்தாலே நடக்க முடியல

எனவே பொதுமக்களின் நலன் கருதி ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ள, கழிவு நீர் கால்வாய்க்கு மழை தண்ணீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
CM MK Stalin:
CM MK Stalin: "பட்டாசு தொழிலாளர்கள் சந்திப்பு முதல் ரோட் ஷோ வரை" விருநுகரில் இன்று முதலமைச்சர் ப்ளான் இதுதான்!
Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்
Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
CM MK Stalin:
CM MK Stalin: "பட்டாசு தொழிலாளர்கள் சந்திப்பு முதல் ரோட் ஷோ வரை" விருநுகரில் இன்று முதலமைச்சர் ப்ளான் இதுதான்!
Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்
Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்
Bank Locker Charges: பயனர்கள் அதிர்ச்சி -  லாக்கர் கட்டணத்தை உயர்த்திய வங்கிகள், ஒவ்வொரு வங்கிக்கான விவரம் இதோ..!
Bank Locker Charges: பயனர்கள் அதிர்ச்சி - லாக்கர் கட்டணத்தை உயர்த்திய வங்கிகள், ஒவ்வொரு வங்கிக்கான விவரம் இதோ..!
Tamilnadu RoundUp: முதலமைச்சர் கள ஆய்வு! புதிய காற்றழுத்த தாழ்வு - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu RoundUp: முதலமைச்சர் கள ஆய்வு! புதிய காற்றழுத்த தாழ்வு - தமிழ்நாட்டில் இதுவரை!
ஆயுஷ்மான் திட்டம்! தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சத்திற்கு சிகிச்சை பெற முடியுமா?
ஆயுஷ்மான் திட்டம்! தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சத்திற்கு சிகிச்சை பெற முடியுமா?
பள்ளியில் வந்த பிரசவ வலி! பெண் குழந்தையை பெற்ற 11ம் வகுப்பு மாணவி - நாமக்கல்லில் ஷாக்!
பள்ளியில் வந்த பிரசவ வலி! பெண் குழந்தையை பெற்ற 11ம் வகுப்பு மாணவி - நாமக்கல்லில் ஷாக்!
Embed widget