மேலும் அறிய
Advertisement
தருமபுரியில் போக்கு காட்டி வந்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
மயக்க நிலையில் இருந்த யானையை அதிகாலை 3 மணி அளவில் சிள்ளாரஹள்ளி மலைப் பகுதியில் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் பிடித்தனர்.
தருமபுரி பகுதியில் 15 நாட்களாக வனத் துறையினருக்கு போக்கு காட்டி வந்த ஒற்றை ஆண் யானையை அதிகாலை மயக்க ஊசி செலுத்தி வனத் துறையினர் பிடித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஒற்றை ஆண் யானை ஊருக்குள் நுழைந்தது. இந்த யானை காரிமங்கலம், பாலக்கோடு, கம்பைநல்லூர், தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அப்பொழுது காரிமங்கலம் பகுதியில் அதிகாலையில் வயல்வெளிக்கு வந்த யானை இளம் பெண் ஒருவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயஸ்ரீ என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மயக்க ஊசி செலுத்தி
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக வத்தல்மலை அடிவாரத்தில் ஆண் யானை சுற்றி திரிந்து வந்தது. இதனை தொடர்ந்து வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆனால் சில நேரங்களில் யானை திடீரென மாயமாகி விடுவதால், வனத் துறையினர் யானையை தேடி அலைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் பொம்மிடி, சில்லாரஹள்ளி பகுதிகளில் மலை அடிவாரத்தில் யானை சுற்றித் திரிந்தது. இதனை அடுத்து வனத் துறையினருக்கு 15 நாட்களாக போக்கு காட்டி வரும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத் துறையினர் முடிவு எடுத்தனர்.
பிடிபட்ட யானை
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வனத் துறையினர் நேற்று காலை முதல் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தொடர்ந்து இரவு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பொழுது கால்நடை மருத்துவர் பயானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். தொடர்ந்து மூன்று மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த யானையை அதிகாலை 3 மணி அளவில் சிள்ளாரஹள்ளி மலைப் பகுதியில் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து பிடிக்கப்பட்ட ஆண் ஒற்றை யானையை லாரி மூலமாக அஞ்செட்டி வனப்பகுதியில் விடுவதற்கு வனத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
மக்கள் நிம்மதி
மேலும் கடந்த 15 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த ஒற்றை ஆண் யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், 3 மயங்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத் துறையினர் தடுப்பதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தற்பொழுது இந்த ஒற்றை ஆண் யானையால் சேதப்படுத்தப்பட்ட விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion