மேலும் அறிய

அரூர் காப்பு காட்டில் நீரின்றி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் மான்கள் - தொட்டிகள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை

அரூர் அருகே உள்ள வனப்பகுதியில் போதிய தண்ணீர் இல்லாததால், தண்ணீருக்காக குளத்திற்கு வந்து ஏமாற்றமடையும் காட்டுப் பன்றிகள் மற்றும் மான்கள் கூட்டம்-தொட்டிகள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளம்பட்டி காப்பு காட்டில், புள்ளிமான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் இருந்து வருகின்றன. இந்த விலங்குகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவினை வனப் பகுதியிலேயே வனத் துறையினர் பயிரிட்டுள்ளனர்.

நீரின்றி ஏமாற்றத்துடன் செல்லும் மான்கள்

ஆனால் கோடை காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் கிராமப்புறங்களுக்கு நுழைவது வழக்கம். இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாததால், கடுமையான வறட்சியை ஏற்பட்டுள்ளது. இதனால் வனப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீரில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வெளியில் வரும் வன விலங்குகள், தற்பொழுது பகல் நேரங்களிலேயே வெளியில் வரத் தொடங்கியுள்ளது. இதனால் கொளகம்பட்டி காப்பு காட்டில் மத்திய நாற்றங்கால் உள்ள வனப் பகுதியில் குளம், குட்டைகளில் மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் அருந்திவிட்டு செல்லும்.  ஆனால் தற்பொழுது போதிய தண்ணீர் வசதி இல்லாததால், இந்த மத்திய நாற்றங்கள் அருகில் உள்ள குறம், குட்டைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் தண்ணீர் அருந்த கூட்டம் கூட்டமாக வரும் புள்ளிவிவரங்கள், தண்ணீர் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறது. மேலும் தண்ணீர் கிடைக்காததால் பகல் நேரங்களில் அந்த சாலையோரம் சுற்றி வருகின்றது. இதனால் புள்ளிமான்களுக்கு நாய்களால் ஆபத்து ஏற்படும் சூழல் இருந்து வருகிறது.

இதேப் போல் மத்திய நாற்றங்கால் பகுதியில் இரண்டு தொட்டிகள் அமைக்கப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தொட்டிக்கு இரவு நேரத்தில் காட்டுப் பன்றிகள் வராது தண்ணீர் குடித்து விட்டு செல்லும். ஆனால் இந்த தொட்டிகளில் தண்ணீர் இல்லாததால், இரவு நேரங்களில் வெளியில் வரும் காட்டுப்பன்றிகள் பகல் நேரங்களிலேயே தொட்டிகளுக்கு தண்ணீர் குடிக்க வருகிறது. ஆனால் தொட்டிகளில் தண்ணீர் இல்லாததால், காட்டு பன்றிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறது. மேலும் தண்ணீர் கிடைக்காததால் பகல் நேரங்களில் அந்த சாலையோரம் உள்ள அந்த தொட்டிகளை சுற்றிய காட்டு பன்றிகள் இருந்து வருகின்றனர். இதனால் காட்டுப் பன்றிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

நீரின்றி காணப்படும் குட்டைகள்

எனவே இதனை கட்டுப்படுத்த வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதியை விட்டு புள்ளிமான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் வெளியில் வருவதை தடுக்க என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
Vinayagar Chaturthi 2025: இன்று விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்... பரவசத்தில் பக்தர்கள்!
Vinayagar Chaturthi 2025: இன்று விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்... பரவசத்தில் பக்தர்கள்!
Coolie Box Office: கூலிக்கு இன்று கூட்டம் வருமா..? இந்தியாவில் மட்டும் 300 கோடியை அடிப்பாரா ரஜினி?
Coolie Box Office: கூலிக்கு இன்று கூட்டம் வருமா..? இந்தியாவில் மட்டும் 300 கோடியை அடிப்பாரா ரஜினி?
FIR on Actors: விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
Vinayagar Chaturthi 2025: இன்று விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்... பரவசத்தில் பக்தர்கள்!
Vinayagar Chaturthi 2025: இன்று விநாயகர் சதுர்த்தி.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்... பரவசத்தில் பக்தர்கள்!
Coolie Box Office: கூலிக்கு இன்று கூட்டம் வருமா..? இந்தியாவில் மட்டும் 300 கோடியை அடிப்பாரா ரஜினி?
Coolie Box Office: கூலிக்கு இன்று கூட்டம் வருமா..? இந்தியாவில் மட்டும் 300 கோடியை அடிப்பாரா ரஜினி?
FIR on Actors: விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
Edappadi Palanisamy: கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
Xiaomi Offer: ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி ஆலயப் பாதையில் நிலச்சரிவு; 5 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி ஆலயப் பாதையில் நிலச்சரிவு; 5 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்
Embed widget