மேலும் அறிய

பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை; சாலையில் வீசி சென்ற கொடூரம்

பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பாலத்திற்கு அடியில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கொம்மநாயக்கனஅள்ளி அருகே தருமபுரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப் பாலத்திற்கடியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை அதிகாலையில், மர்ம நபர்கள் யாரோ வீசிவிட்டு சென்றுள்ளனர்.

பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை; சாலையில் வீசி சென்ற கொடூரம்

இந்த நிலையில் காலையில் பாலத்திற்கு அடியில் பச்சிளம் குழந்தை அழுது கெண்டிருந்துள்ளது. அப்பொழுது அந்த வழியாக சென்றவர்களுக்கு குழந்தையின் அழுகுரலை கேட்டு அருகே சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை கோணிப் பையில் சுருட்டி வைத்திருந்தது தெரியவந்துள்ளது‌. இதனை கண்டு அந்த வழியாக சென்ற மக்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பாலக்கோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலக்கோடு காவல் துறையினர் குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

பிறந்து சில மணி நேரங்களை ஆன பெண் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு வைத்து மருத்துவர்கள் பிச்சை எடுத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் பாலக்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டது குறித்த தகவலறிந்து, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு நேரில், சென்று குழந்தையை பார்த்து மருத்துவர்களிடம் குழந்தை உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து, குழந்தையை பாதுகாப்பாக கவனித்து கொள்ள வேண்டும் என மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தைகள் மையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை, பாலத்தகற்கு அடியில் வீசி சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்த, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட சுகாதாரத் துறையினரும் பிறந்த பெண் குழந்தையை பாலத்திற்கு அடியில் வீசி சென்ற மர்ம நபர்களை கண்டறிவதற்காக பாலக்கோடு மற்றும் தர்மபுரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தருமபுரி-ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை பகுதி மற்றும் கொம்ப நாயக்கனள்ளி பாலத்திற்கு வருகின்ற சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து, குழந்தையை வீசி சென்ற மர்ம நபர்கள் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சமீப காலமாக தருமபுரி மாவட்டத்தில் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால், கருக்கலைப்பு செய்யும் கும்பல்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில்,  பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பாலத்திற்கு அடியில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிரடி ஆக்சன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள் !
அதிரடி ஆக்சன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள் !
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
Kamala vs Trumph Debate: கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்Rahul Gandhi slams PM Modi | ”திறமை இல்லாத மோடி” வெளுத்து வாங்கிய ராகுல்.. தீப்பொறி PressmeetAarti Ravi on Divorce : விவாகரத்து!’’எனக்கே தெரியாது’’ஆர்த்தி ரவி குற்றச்சாட்டுKanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிரடி ஆக்சன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள் !
அதிரடி ஆக்சன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள் !
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
Kamala vs Trumph Debate: கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
Actor Jeeva Car Accident: அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
ABP Nadu Exclusive: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
Actor Jeeva Accident: அச்சச்சோ! மனைவியுடன் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா - என்னாச்சு?
Actor Jeeva Accident: அச்சச்சோ! மனைவியுடன் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா - என்னாச்சு?
அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?
அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?
Embed widget