மேலும் அறிய

“முதல்ல நீங்க, அப்புறம்தான் பார்லிமென்ட்” .... ஓடோடி வந்து மக்களுக்கு நன்றி சொன்ன தருமபுரி எம்பி

தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவைச் சார்ந்த எம்பி வழக்கறிஞர் ஆ.மணி, அரூர் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி, பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை விட 24 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

இதில் ஆ.மணிக்கு அரூர் சட்டமன்றத் தொகுதியில் 85 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. இதுவே அவர் வெற்றி பெறுவதற்கு காரணமாகவும் இருந்தது. இதனை அடுத்து வருகிற 24-ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவியேற்பு விழா தொடங்கும் நிலையில், தன்னை வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திமுக எம்பி ஆ.மணி வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.  

மேலும் தான் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த அரூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு, நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பே வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிலையில் அரூர் சட்டமன்றத் தொகுதியில் சிக்கிளூர், நரிப்பள்ளி, பையர்நாயக்கன்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், எஸ்.தாதம்பட்டி, டி.அம்மாபேட்டை, தீர்த்தமலை, பொய்யப்பட்டி, வேப்பம்பட்டி,  மாம்பாடி, ஈட்டியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து, நன்றி தெரிவித்தார்.

அப்பொழுது கிராமங்களில் மேளதாளங்கள் முழங்க,  பெண்கள் பூத்தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, எந்த நேரத்திலும் பாடுபடுவேன். உங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை என்னிடம் கொடுத்தால், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன் என உறுதி அளித்து வருகிறார். 

மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சார்ந்த 8 இளைஞர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இன்று நன்றி தெரிவிக்க சென்ற திமுக எம்பி மற்றும் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், திமுக மேற்கு மாவட்டத்தின் சார்பில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு தலா ரூ.15,000 நிதி உதவியை வழங்கினார்.

மேலும் சுய தொழில் தொடங்குவதற்கு தேவையான வங்கி கடன்  பெற்று தருவதாகவும், அவர்களுக்கு உறுதி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், விசிக மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா, திமுக ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் எம்எல்ஏ ஆர்.வேடம்மாள், சந்திரமோகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?
தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget