மேலும் அறிய

அதியமான் கோட்டை வளாகத்தில் நடு கற்கள் அகல் வைப்பகம் பணிகள் விரைவில் தொடங்கும் - தருமபுரி ஆட்சியர் உறுதி

அதியமான் கோட்டை வளாகத்தில் நடு கற்கள் அகல் வைப்பகம் பணிகள் விரைவில் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தகவல்

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை வள்ளல் அதியமான் கோட்டை வளாக முன் புறத்தில் உள்ள 50 சென்ட் இடத்தில் நடு கற்கள் அகல் வைப்பகம் அமைப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

அதியமான் கோட்டை வளாகத்தில் நடு கற்கள் அகல் வைப்பகம் பணிகள் விரைவில் தொடங்கும் - தருமபுரி  ஆட்சியர் உறுதி
தருமபுரி மாவட்டத்தின் வரலாறு கி.மு 5 ஆயிரம் (புதிய கற்காலம்) முதல் தொடங்குகிறது. பண்டைய காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சமுதாயத்தின் நன்மைக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்காக நடு கற்கள் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

வீரர்கள் அப்பகுதி மக்களை கொடிய விலங்குகளிடமிருந்தும் பிற பழங்குடியினரிடம் இருந்தும் காத்து வந்துள்ளனர். அவர்களுக்காக எழுப்பப்பட்டவை வீர நடு கற்கள் அல்லது நினைவு நடு கற்கள் எனப்படுகின்றன. 

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் அதிக அளவிலான நடு கற்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நடுக்கல்லாவது காணப்படுகிறது. இந்த நடு கற்கள் கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் கிபி 17ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை சார்ந்தவை ஆகும். 

தருமபுரி டவுன் பஸ் நிலையம் அருகே தொல்லியல் துறையின் அகல் வைப்பகம் உள்ளது. இங்கு நடு கற்கள்  புதிய கற்கால கருவிகள் பெரும் கற்கால பொருட்கள் கத்தி, குறுவாள், சீமைத் தொட்டிகள், யாழிகள், மூன்று கால்கள் மற்றும் ஐந்து கால்களை உடைய ஜாடிகள், துர்க்கை மற்றும் சமண சமய புத்தக சமய சிற்பங்கள், சுடு மண்ணால் ஆன உருவங்கள், விளக்குகள் மற்றும் குழாய்கள், காசுகள், பதக்கங்கள், பீரங்கிகள், மரப் பொருட்கள், செம்பு பொருட்கள், இரும்பு பொருட்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவை காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த அகல் வைப்பகத்தில் போதிய இடவசதி இல்லாமல் திறந்தவெளியில் நடு கற்கள் வைக்கப்பட்டுள்ளது. மலையிலும், வெயிலிலும் இந்த நடு கற்கள் பாதிக்கும்  நிலைக்கு வந்துள்ளது.

இந்த அகல் வைப்பக அருங்காட்சியகத்தில் தமிழர் வீரத்தை பறைசாற்றும் விதமாக 25க்கும் மேற்பட்ட நடு கற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 1979- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அகல் வைப்பகம்  வீரர்களின் அகல் வைப்பகமாக திகழ்கிறது.

பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் நேரில் வந்து பார்வையிட்டு வரலாறுகளை தெரிந்து செல்கின்றனர். இந்த அருங்காட்சியத்தை பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற வரலாற்று மாணவர்கள், ஆசிரியர்கள் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசு அதியமான் கோட்டை வள்ளல் அதேமான் கோட்டம் வளாகத்தில் 50 சென்ட் இடத்தில் நடு கற்கள் அகல் வைப்பகம் அமைக்கப்பட்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இதை வரலாறு மாணவர்கள், ஆசிரியர்கள் மாவட்ட மக்கள் வரவேற்கின்றனர்.

தருமபுரி அருங்காட்சியகத்தை  மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:-

தமிழக அரசு சட்டமன்றத்தில் 2022 - 2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிவிக்கப்பட்டு தர்மபுரியில் உள்ள அழல் வைப்பகம் மேம்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதற்கு இணங்க தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் வந்து செல்வதற்காக நிலம் ஒதுக்கீடு செய்து தருமாறு தொல்லியல் துறையின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் தமிழர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழு உறுப்பினர்கள் ஆய்வின் போது குழு மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் உடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதில் வள்ளல் அதியமான் கோட்டத்தில் முன்புறத்தில் உள்ள இடத்தில் நடு கற்கள் அகல் வைப்பகம் அமைப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அதியமான் கோட்டை வள்ளல் அதியமான் கோட்ட வளாக முன்புறத்தில் உள்ள 50 சென்ட் இடத்தில் நடு கற்கள் அகல் வைப்பகம் அமைப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

நடு கற்கள் அகல் வைப்பகம் அமைய உள்ள இடத்தில் நமது மாநிலம் மற்றும் மாவட்டத்தின் கிடைக்கப்பெற்ற அருப்பொருட்களை பேணி பாதுகாக்கும் வகையில் மூன்று அடுக்குகளாக கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக திட்ட அறிக்கை தயாரிக்க செயற்பொறியாளர் பாரம்பரிய மரபு கட்டிடக்கோட்டம் தொல்லியல் துறையை சார்ந்த அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து அரசுக்கு திட்ட அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவகுமார் பிஆர்ஓ மோகன் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
Trump AI Video Viral: அறியா வயது முதல் அதிபர் வரை.. வைரலாகும் ட்ரம்ப் குறித்த அசத்தலான ஏஐ வீடியோ...
அறியா வயது முதல் அதிபர் வரை.. வைரலாகும் ட்ரம்ப் குறித்த அசத்தலான ஏஐ வீடியோ...
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
China Vs America Tariffs: வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
Trump AI Video Viral: அறியா வயது முதல் அதிபர் வரை.. வைரலாகும் ட்ரம்ப் குறித்த அசத்தலான ஏஐ வீடியோ...
அறியா வயது முதல் அதிபர் வரை.. வைரலாகும் ட்ரம்ப் குறித்த அசத்தலான ஏஐ வீடியோ...
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
China Vs America Tariffs: வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
ICAI CA Results: என்னாது? சிஏ தேர்வில் வெறும் 14% தேர்ச்சிதானா? முதலிடம் பிடித்த ஹைதராபாத் மாணவி- விவரம்!
ICAI CA Results: என்னாது? சிஏ தேர்வில் வெறும் 14% தேர்ச்சிதானா? முதலிடம் பிடித்த ஹைதராபாத் மாணவி- விவரம்!
America Vs Canada: பழிக்குப் பழி.. வரிக்கு வரி.. அமெரிக்காவிற்கு ஆப்படித்த கனடா...
பழிக்குப் பழி.. வரிக்கு வரி.. அமெரிக்காவிற்கு ஆப்படித்த கனடா...
Travis Head Catch :  ஹெட்டை கழற்றிய தமிழன் வருண்.. நிம்மதி பெருமூச்சு விட்ட ஷமி
Travis Head Catch : ஹெட்டை கழற்றிய தமிழன் வருண்.. நிம்மதி பெருமூச்சு விட்ட ஷமி
Embed widget