'அடுத்த முறை மோடி மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க இயலாது’ - வானதி சீனிவாசன்
கர்நாடகா வெற்றியை வைத்து அவர்கள் கனவு காண்கிறார்கள். பேருக்காக கட்சியை நடத்துபவர்களை கூட்டிக் கொண்டு வந்து வைத்தால் கூட அடுத்த முறை மோடி மீண்டும் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க இயலாது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் எந்த ஒரு காரணத்திற்காக அரசு மது கடைகளை நடத்துகிறார்களோ? அதற்கு முரணாக தமிழகத்தில் கள்ளச்சாராய சாவுகள் ஏற்பட ஆரம்பித்து உள்ளது. மதுவிலக்கை ஏன் அமல்படுத்தவில்லை? அரசாங்கத்திடம் இருந்து வரக்கூடிய ஒரே பதில், கள்ள சாராயத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனப் பதில் தெரிவித்து விட்டு, அரசாங்கமே மதுக்கடைகளை நடத்திக் கொண்டு தற்போது கள்ளச்சாராய சாவுகள் நடைபெறுகிறது என்றால் முழுமையாக அரசு அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
அதைப்போல எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்பிற்குப் பிறகு நடவடிக்கை என்பது அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மதுவிலக்கு பிரிவு அவர்களுக்கு சுதந்திரம் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து மனு அளித்து உள்ளார். அதேபோல தற்போது விமானத்தில் வரும் பொழுது உள்ளாட்சித்துறை அமைச்சரை சந்தித்து சாலைகளுக்காக நிதிகளை ஒதுக்கினோம். ஆனால் புதிய ரோடுகளை கண்ணில் பார்க்க முடியவில்லை. வரக்கூடிய காலத்தில் என் முன்னே சாலைகள் சரி செய்ய அதிகாரிகளிடம் பேசினார்.
காங்கிரஸ் கட்சியை நம்பி வருவதற்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் தயாராக இல்லை. மேடைக்கு செல்வார்கள் ஆனால் தேர்தல் களம் என்று வந்து விட்டால் வேறு. கர்நாடகா வெற்றியை வைத்து அவர்கள் கனவு காண்கிறார்கள். பேருக்காக கட்சியை நடத்துபவர்களை கூட்டிக் கொண்டு வந்து வைத்தால் கூட அடுத்த முறை மோடி மீண்டும் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க இயலாது. நாட்டில் இருக்கும் 95% மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டால் பிரச்சனைகள் இல்லை. அதனை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்து உள்ளவர்களுக்கு தான் பிரச்சனை. எனவே 2000 ரூபாய் நோட்டு எங்கெங்கு இருந்து வருகிறது என்பதை கண்காணித்தாலே நடவடிக்கை எடுப்பது சுலபம். 2000 ரூபாயை கடைக்காரர்களோ வியாபாரிகளோ வாங்க மறுத்தால், வேண்டுமென்றே அலைக் கழித்தால் நடவடிக்கை எடுக்கலாம். கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் கொடுக்கிறார்கள். நல்ல சாராயம் குடித்தும் பலர் இறக்கின்றனர். மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதன் மூலம் உயிர் இழப்பு ஏற்படும் பொழுது இழப்பீடு தர வேண்டும். அமைச்சர் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கொடு என்கிறார். தானே டாஸ்மாக் கடைக்கு போய் தான் ஆதாரம் கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்