மேலும் அறிய

Vanathi Srinivasan: மாட்டு கோமியம் குடிப்பது தனிப்பட்ட விருப்பம் - வானதி சீனிவாசன்

உங்களுக்கு மருத்துவ காரணங்கள் இருக்கிறதா? பிடித்து இருக்கிறதா? இல்லை சாப்பிடுகிறீர்களா? இந்த சாப்பிட விஷயங்கள் எல்லாம் என்பதை தனிப்பட்ட சாய்ஸ் என்றார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, இலங்கை, தமிழர்களுக்கான ஒரு கூட்டமும் ஓவர்சீஸ் பிரெண்ட்ஸ் ஆப் பி பி.ஜே.பி ஆதரவாளர்களுக்கான பிரிட்டன் அமைப்பின் ஒரு கூட்டத்தின் கலந்து கொண்டு வந்து இருக்கின்றேன். எனக்கு வரவேற்பு கொடுத்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவள்ளுவரையும், வள்ளலாரையும் வேறு யாரோ களவாட முயற்சி செய்து இருக்கிறார்கள் என மாநிலத்தின் முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார். திருவள்ளுவர் திருக்குறளில் இந்து ஞான மரபினுடைய கருத்துக்களை தான் தெரிவித்து இருக்கிறார். கடவுள் வாழ்த்து என்ற தனியான ஒரு அதிகாரம் திருக்குறளில் பல்வேறு இடங்களில் இந்து மத கருத்துக்களை அவர் வெளிப்படுத்தி இருப்பது அனைவரும் அறிந்தது. 

அதே போல வள்ளலார் இந்து சமய ஞானத்தின் ஒரு கூறாக அவர் விளங்கியவர். ஆனால் திராவிட மாடல அரசு திட்டமிட்டு இந்த இரண்டு பேரும் தமிழ் அடையாளங்களை அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் போல, அவர்களுடைய உருவத்திலே மத அடையாளங்களை தவிர்த்து விட்டு வரைவது அவர்கள் இந்து மதத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என பேசுவது என எது இந்த நாட்டின் அடையாளமோ? எது இந்து ஞான மரபின் உடைய சுதந்திரமாக சிந்தித்து செயல்படக் கூடிய தன்மையோ? அவற்றை எல்லாம் மனிதனுக்கு தனியாக ஒரு தமிழ் அடையாளத்திற்கு உள்ளாக திராவிட அடையாளத்திற்கு உள்ளாக நுழைய வைத்து தங்களுடைய சுய லாப அரசியலுக்காக இதை பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார்.

Vanathi Srinivasan: மாட்டு கோமியம் குடிப்பது தனிப்பட்ட விருப்பம் - வானதி சீனிவாசன்

திருவள்ளுவரும் வரலாறும் இந்த நாட்டில் இருக்கின்ற தனித்துவமான கலாச்சார பண்பாடு மற்றும் அவர்களுடைய சிந்தனை இந்து மத சிந்தனைகளுக்காக உலகம் முழுக்க அறியக் கூடியவர்கள் முதல்வரின் இந்த கருத்து திருவள்ளுவர் தினத்திற்காக அல்லது திருவள்ளுவர் திருக்குறளை பற்றி உலக அரங்குகளிலேயும் இந்திய நாட்டில் எங்கு சென்றாலும் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதை பொறுத்துக் கொள்ளாமல் ஒருவித பதட்டத்திற்கு உள்ளாகி மாநிலத்தின் முதலமைச்சர் இது மாதிரியான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய ஒரு கலாச்சார மையம் ஒன்று இந்திய அரசின் முழு நிதி உதவியோடு கட்டப்பட்டது. அதற்கு திருவள்ளுவரின் பெயரை சூட்டி இருக்கிறது. மத்திய அரசு திருவள்ளுவருக்கு இருக்கை அமைத்து வட இந்தியாவில் கூட பல்கலைக் கழகங்களில் பெருமை படுத்திக் கொண்டு இருப்பது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலக அரங்கிலே திருக்குறளை பற்றி பேசி நம்முடைய தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் பெருமை சேர்த்துக் கொண்டு இருப்பது இன்று உலக அளவில் விளங்கிக் கொண்டு இருக்க கூடிய பிரதமர் மோடி அவர்கள் ஆனால் திராவிட மாடன் அரசு என்று சொல்லிக் கொண்டு இருக்க கூடிய தி.மு.க அரசு தமிழருக்கான மரப அடையாளங்களை, சமத்துவ பொங்கல் என்ற பெயரிலே சீரழிக்க நினைக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஏனென்றால் சமத்துவ பொங்கல் யார் வேண்டுமானாலும், கொண்டாடலாம் அது தவறில்லை ஆனால் உங்களுக்கான அடையாளம் என்பது என்ன? இன்று ஜல்லிக்கட்டு விழாவின் போது கூட கோவில்களில் இருந்து தான் காலையில் அவிழ்த்து விடப்படுகிறது. கோவில் பூஜை செய்த பிறகு தான் ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கிறது. ஆக கோயில் என்பதும் இந்து மத பண்டிகைக்கான அடையாளங்கள் என்பதும் பொங்கலோடு, பொங்கல் பண்டிகையோடு இரண்டறக் கலந்தது தி.மு.க அரசு இந்து மதத்தின் மீது இருக்கக் கூடிய வெறுப்பின் காரணமாக இந்த அடையாளங்களை மறைத்து வேறு ஏதோ விதத்தில் சமத்துவ பொங்கல் என மக்கள் முன்பாக அவர்கள் வேறொரு உருவத்தை வரைய நினைக்கிறார்கள். அதை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, நம் நாட்டில் கல்வித் துறை என்று எடுத்துக் கொண்டால் கல்வித் துறை என்பது மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பொதுவான ஒன்று குறிப்பாக உயர் கல்வித் துறை என்பது. அதிகமாக மத்திய அரசின் நிதி உதவி நாள் நடத்தப்படக் கூடியது அது இந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குகின்ற பொழுது சட்ட, திட்டத்தின் போது அதில் தேவைப்படக் கூடிய ஒரு பாதுகாப்பு அம்சங்களை வைத்து இருக்கிறார்கள் இதற்கு முன்பாக துணைவேந்தர் நியமனம் என்பது எப்படி ? எல்லாம் பணம் பெற்றுக் கொண்டு அல்லது அதில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடந்து இருக்கிறது. என்பது விதமான பல்வேறு வழக்குகளை உள்ளது.

Vanathi Srinivasan: மாட்டு கோமியம் குடிப்பது தனிப்பட்ட விருப்பம் - வானதி சீனிவாசன்

ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததற்கு பின்பாக கல்வித்துறை என்பது முழுவதும் சுதந்திரமாக மிகச் சிறந்த கல்வியாளர்களை வைத்து நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதில் எந்த விதத்தில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அந்த புரிதலில் என்ன சிக்கல்கள் வருகிறது என்றால், கவர்னர் மீது தனிப்பட்ட தாக்குதலை தி.மு.க அரசு நடத்திக் கொண்டு இருக்கின்றது கவர்னர் என்பவள் வேந்தர் அவரை தரக்குறைவாக விமர்சிப்பதும் ஒரு கட்சி அரசியலுக்கு உள்ளாக அவர் கருத்துக்களை இழுத்து வருவதாக அரசியல் செய்வது தி.மு.க அரசு ஏற்கனவே மத்திய அமைச்சர் ரெட்டி அவர்கள் வெளிப்படையாகவே சொல்லி இருந்தார் நாங்கள் மத்திய அரசு, நீங்க மாநில அரசின் ஒப்புதல் காரணமாக நாங்கள் அதை கொடுத்தோம் மாநில அரசு இதில் முடிவு எடுங்கள் என்று கூறி இருந்தார். இது தொடர்பாக எங்களுடைய தென் தமிழகத்திற்கு கூடிய கட்சி நிர்வாகிகள் கூட இன்று அவரை சந்திப்பதற்காக டெல்லி வந்து இருந்தார்கள். ஆனால் தமிழகத்தின் நலனுக்கு ஒருபோதும் பதாக அரசு பாதிப்பை ஏற்படுத்தாது. தமிழக மக்களின் நலனுக்காக தமிழக பா.ஜ.க எப்பொழுதும் குரல் கொடுக்கும்.

விஜய் அவர்களுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்றே பதில் கூறி இருந்தால் விமான நிலையத்திற்கு சென்னையில் இடம் எங்கே இருக்கிறது. இன்றைக்கு எந்த ஒரு புதிதான வேலை வாய்ப்பை உருவாக்கினாலும், கட்டமைப்பு வசதிகளுக்காக நிலம் தேவைப்படுகிறது, இன்றைக்கு நமக்கு வளர்ச்சி என்கின்ற போது இந்த நிலம் இல்லாமல் வளர்ச்சி என்பது இல்லை. அதே சமயம் விவசாயிகளின் நலனை பாதிக்கின்ற வளர்ச்சி என்பதை நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை ஆனால் ஏதாவது ஒரு இடத்தில் விமான நிலையம் தேவைப்படுகிறது. கோவையை எடுத்துக் கொள்ளுங்கள், கோவை விமான நிலையத்தில் விரிவாக்கத்திற்கு எத்தனை ஆண்டுகளாக போராடிக் கொண்டு இருக்கின்றோம். இன்றைக்கு கேரளாவில் இருக்கக் கூடிய கொச்சின் விமான நிலையத்திற்கு அங்கு செல்லக் கூடிய அளவிற்கு வந்து ஆகிவிட்டது. ஒரு பக்கம் என்ன நினைக்கிறோம் என்றால் விமான நிலையம் வந்தால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு புதிதாக தொழில் நிறுவனங்கள் இதை பேலன்ஸ் செய்து தான் நாம் எப்போதுமே, முடிவெடுக்க வேண்டும். ஆனால் விஜய் அவர்கள் ஏதாவது ஒரு புதிதான விஷயத்தை மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்த முடியுமா? என்று நினைக்கிறாரா? என்று தெரியவில்லை. ஆனால் வளர்ச்சி என்கின்ற போது கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அவரிடம் அவர் கட்சியிடம் என்ன தீர்வு என்பதை ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள் கேட்டு சொல்லுங்கள் என்றார்.

மாட்டு கோமியம் குடிப்பது என்பது ஒவ்வொருவருடைய, தனிப்பட்ட விருப்பம் உங்களுக்கு மருத்துவ காரணங்கள் இருக்கிறதா? பிடித்து இருக்கிறதா? இல்லை சாப்பிடுகிறீர்களா? இந்த சாப்பிட விஷயங்கள் எல்லாம் என்பதை தனிப்பட்ட சாய்ஸ் இதில் கட்சி எந்த விதத்தில் அதில் பேச முடியும் எல்லாத்துக்கும் அவர்களின் தனிப்பட்ட உரிமையை மதிக்க வேண்டும் அவ்வளவு தான். 

லண்டனில் வரவேற்பு நன்றாக இருந்தது. அதாவது கனடா பிரிட்டன் மாதிரியான நாடுகளில் ஒரு மாதத்தை ஹெரிடேஜ்மென்ட் என்று கலாச்சாரமாக கடைபிடிக்கிறார்கள் ஒரு அரசாங்கமே எல்லோருக்கும் பண்டிகைகளுக்கும், முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த பண்டிகை என்பது அது தொடர்பான குழந்தைகளுக்கு அதை சொல்லித் தருவது விழிப்புணர்வை ஏற்படுத்துவது. கட்சிகளின் இருக்கக் கூடிய நபர்கள் கலந்து கொள்கிறார்கள். அதை பெருமையாக கொண்டாடுகின்றார்கள். நமது தமிழர் திருநாள் வெளிநாடுகளில் உற்சாகமாக கொண்டாடப்படுவது, என்பது மகிழ்ச்சியான விஷயமாக நான் பார்க்கிறேன்.

சங்கனூர் பள்ளம் அருகே வீடு சரிந்து விழுந்த இடத்தை பார்ப்பதற்கு நாளை காலை செல்ல உள்ளேன். அங்கு கட்சிக்காரர்கள் சென்று இருக்கிறார்கள். என்ன வேண்டுமோ ? கேட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன வேண்டுமோ ? அதை செய்து கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம். 

கட்சி வேறுபாடு இன்றி எந்த மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அந்த மக்களின் குரலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவேன் என்றார்.  

ஏற்கனவே தெற்கு தொகுதியில் நிறைய மகளிர்கான திட்டங்கள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கின்றது. இதை விட லண்டனில் அங்கு இருந்து வந்து ஏதாவது கருத்துக்கள் இருந்தால், நிச்சயமாக வரக் கூடிய காலத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து அதற்கான முயற்சிகளை எடுப்பேன் என்றும் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget