’அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும்’ - வானதி சீனிவாசன்
"நியாயமான விசாரணை செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தால் பாதிக்கும் என்பது அறிந்ததுதான். இந்த மாதிரி முடிவுக்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும்”
பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் கோவை சித்தாபுதூரில் உள்ள வி.கே.கே மேனன் சாலையில் நடைபெற்றது. இதில் கலந்து பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், “நமது பிரதமர் மோடியின் அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பதைப் பற்றி நாடு முழுவதும் இது போன்ற கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் கிரிமினல் வழக்கிலே கைதாகி, அதற்கு பின்பாக உடல் நிலையை காரணம் காட்டி மருத்துவமனையில் இருக்கின்ற அமைச்சர் இப்பொழுது மாநிலத்தின் உடைய ஆளுநரால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
கோவையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது தேர்தலில் எந்த அளவிற்கு அதிகார துஷ்பயோகம் பண்ண முடியுமோ, அந்த அளவிற்கு தேர்தலை கொச்சைப்படுத்தி, ஒரு போலியான தேர்தல் வெற்றி பெறக் காரணமாக இருந்தவர், அமைச்சரவையில் இருந்து எடுத்து எறியப்பட்டு இருக்கிறார். 9 ஆண்டு காலம் இந்தியாவின் வளர்ச்சி ஏழை எளிய மக்கள் வாழ்க்கை தரம் மேம்பாடு, அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள், சிறு குறு தொழில் நன்மைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என முன்னேற்றங்களுக்காக திட்டங்களை பார்த்து பார்த்து கொடுத்துக் கொண்டுள்ளது. இன்று கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியது பிரதமர் மோடி தலைமையிலான அரசு.
தமிழ்நாட்டில் மட்டும் 45 லட்சம் விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். ஒரு ரூபாய் கூட சிந்தாமல், சிதறாமல் யார் உடைய வீட்டு வாசலில் நிற்காமல் ஏழை, எளிய விவசாயிகளுக்கு நேரடியாக பணத்தை கொடுத்துக் கொண்ட இருப்பது பிரதமர் மோடி தலைமையிலான அரசு. மாநில அரசாங்கத்தில் எதை எடுத்துக் கொண்டாலும் மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்றும், மாப்பிள்ளை மிக முக்கியம் என மந்திரிகளே சொல்கிறார்கள் மாப்பிள்ளை நினைத்தால் தான் எல்லாம் முடியும். நடப்பது திராவிட மாடல் ஆட்சியா ? அல்லது மாப்பிள்ளை மாடல் ஆட்சியா? திராவிட முன்னேற்ற கழகம் நாட்டிற்கு ஏதாவது ஒரு மாடலை காட்டுகிறார்கள் என்றால், அப்போ அது எல்லாமே புது மாடல் தான்.
மாப்பிள்ளை மற்றும் மகனைப் பற்றி அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர் ஒருவர் கூறினார். அந்த அமைச்சரை ஏன் மாற்றினீர்கள்? சட்ட பேரவையில் கேள்வி எழுப்பினாலே போதும் உடனே எழுந்து நின்று நிதியமைச்சர் உங்களைப் பேச விட மாட்டார். அப்படி இருந்த அமைச்சரை நிர்வாக காரணத்தினால் தகவல் தொழில்நுட்ப மந்திரியாக மாற்றி உள்ளீர்கள். அதற்கு என்ன காரணம்? மாப்பிள்ளையை பற்றி அவர் பேசிய தான் காரணம். முதலமைச்சர் பதவிக்கு உங்க வீட்டில் உள்ள பெண் பெயரை சொல்ல முடியுமா? இல்லை தொண்டர் பெயரை சொல்ல முடியுமா? மாநில கட்சிகளை எடுத்தால் குடும்ப அரசியல், ஊழல் அரசியல் தான். அமைச்சரவையில் எத்தனை பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள்? பாஜகவில் இருப்பவர்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள். ஆனால் திமுக அப்படியில்லை. பாஜகவினர் அக்மார்க் தரம் கொண்டவர்கள்.
அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை உலக அரங்கில் எடுத்துரைத்தவர் பிரதமர் மோடி. உலகத்தில் எங்கு சென்றாலும் பிரதமருக்கு மரியாதை கொடுக்கின்றனர். உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டின் உயரிய விருதுகளை பிரதமருக்கு அளித்து வருகின்றனர். இந்தியாவின் பாஸ்போர்ட்க்கு பெருமிதம் கிடைத்துள்ளது. ஆளுநர், அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கியதாக செய்தி குறிப்பு வந்துள்ளது. அமைச்சர் மீதான குற்ற விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்றால், அவர் அமைச்சராக தொடர வேண்டும் என்பது உகந்தது அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தில் எவற்றை பாதுகாக்க வேண்டும் என ஆளுநர் நியமிக்கப்பட்டாரோ அது சீர்குலைவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அவர் அறிக்கையில் கவர்னர் எடுத்துள்ள முடிவு எதனால் என்பது புரியும்.
முதல்வர் நீதிமன்றத்தில் பதில் சொல்லலாம். ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதை தெரிவிக்கலாம். நியாயமான விசாரணை செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தால் பாதிக்கும் என்பது அறிந்தது. மாநில அமைச்சர்கள் தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து பேசி வருகிறோம். இந்த மாதிரி முடிவுக்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும். வெற்றியடைந்தது ஸ்டாலின் தான். செந்தில் பாலாஜிக்கு எதிராக அவர்தான் குற்றச்சாட்டு வைத்தார். பாஜக அதிமுக வெற்றியை விட ஸ்டாலின் வெற்றியாக அவர்கள் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/