மேலும் அறிய

நீலகிரி மலை ரயில் போக்குவரத்து துவக்கம் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை சூழலை ரசித்தபடி, உதகைக்கு நீலகிரி மலை இரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை ரயில், நீலகிரி மலை இரயில். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வரை 46.61 கிலோ மீட்டர் தூரம் இந்த மலை இரயிலில் பயணிக்க முடியும். மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி இன்ஜின் மூலம் இரயில் இயக்கப்படுகிறது. குன்னூர் – உதகை இடையே டீசல் இன்ஜினில் இயக்கப்படுகிறது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் நீலகிரி மலை இரயில் கவர்ந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை சூழலை இரசித்தபடி, உதகைக்கு நீலகிரி மலை இரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மலை ரயில் போக்குவரத்து துவக்கம் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மலை இரயில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மலை ரயில் பயணத்தை மீண்டும் தொடர்ந்துள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்த கட்டணமே தொடரும் எனவும், முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதன்படி இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு கிளம்பிய மலை ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.

நீலகிரி மலை ரயில் போக்குவரத்து துவக்கம் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

மலை ரயிலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படும் எனவும், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி மலை இரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கப்படுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வனத்துறை சுற்றுலா தலங்கள் திறப்பு

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த சுற்றுலா தலங்களுக்கு பொது மக்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சி, பரளிக்காடு சூழல் சுற்றுலா உள்ளிட்டவை இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ள பல மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் பொது மக்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இதேபோல மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு அருகேயுள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் படகு சவாரி, ஆற்றில் குளியல், டிரெக்கிங் உள்ளிட்டவை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா ஊரடங்கினால் முடங்கி இருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Embed widget