மேலும் அறிய

சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? மனித உரிமை ஆணையத்தை நாடும் வழக்கறிஞர்!

"நீதிபதி முன்னிலையில் கைது குறிப்பாணையில் கையெழுத்திட்ட சவுக்கு சங்கர், தேனி காவல் துறையினர் கைது குறிப்பாணை கொடுக்கப்பட்ட நகலில் கைரேகை இட்டுள்ளார்"

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது தொடர்பாக கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் சார்பில் 3 வழக்கறிஞர் 2 மருத்துவர்களுடன் சிறையில் நேரடியாக சவுக்கு சங்கரை சந்தித்துள்ளனர். நேற்று என்ன நிலைமையில் இருந்தாரோ, அதே நிலையில் தான் இன்றும் காயங்களுடன் உள்ளார்.வலி நிவாரணி மாத்திரைகளை அவருக்கு கொடுத்து வருகின்றனர். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளான கை உடைக்கப்பட்டது, காயங்கள் தொடர்பாக சட்டப்பணிகள் குழுவினர் கேட்டறிந்துள்ளனர். கோவை மத்திய சிறை நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் சவுக்கு சங்கருக்கு கூடுதல் மருத்துவம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டும், தேவையான மருத்துவம் மேற்கொள்ளப்படவில்லை.

சவுக்கு சங்கரை தாக்கியதாக புகார்

மருத்துவ உதவி செய்யவில்லை என்று நேற்று மனு தாக்கல் செய்து இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சார்பில் நேரடியாக ஆய்வு செய்துள்ள நிலையில், சென்னையில் வழங்கப்பட்டுள்ள சிறைத்துறை அறிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. சனிக்கிழமை நீதிபதி முன்னிலையில் கைது குறிப்பாணையில் கையெழுத்திட்ட சவுக்கு சங்கர், இன்று காலை தேனி காவல் துறையினர் கைது குறிப்பாணை கொடுக்கப்பட்ட நகலில் கைரேகை இட்டுள்ளார். ஏன் அவர் கைரேகை இட்டுள்ளார்? கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் காவல் மனு மீதான இன்று விசாரணை வந்த நிலையில், சவுக்கு சங்கர் தன் மீதான தாக்குதல் தொடர்பாக நீதிபதியிடம் தெரிவிக்க வாய்ப்புள்ளதால் தான் இன்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மனித உரிமை ஆணையத்தில் புகார்

இந்த நிமிடம் வரை எக்ஸ்ரே எடுக்கவில்லை. சிறையில் நேரடியாக ஆய்வு செய்த சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கை பெற்று, சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நாளை கேட்க உள்ளோம். நாங்கள் எக்ஸ்ரே எடுக்க சொல்லி தான் கேட்கிறோம். சவுக்கு சங்கருக்காக மட்டும் இந்த முயற்சி இல்லை, நாள்தோறும் காவலர்களால் மனித உரிமை மீறல்கள், லாக் அப் தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளது, அதை சரி செய்யவே இந்த முயற்சி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் செல்வோம், ஆனால் முதலில் மருத்துவ உதவி அவசியம், 2 நாட்கள் போராடியோம் ஒரு எக்ஸ்ரே எடுக்க முடியவில்லை. அரசுக்கு எதிராக பேசியதன் காரணமாக காவல் துறை மூலமாக பழி வாங்கப்படுவதாக சவுக்கு சங்கர் எண்ணுகிறார்.

மருத்துவ உதவி செய்து அவர் உயிருடன் இருந்தால் தான் காவல்துறை வழக்கு போட முடியும் என்று சொல்லி கொள்கிறேன். காவல் துறை அராஜகம், சிறையில் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதை தான் இந்த வழக்கில் முக்கியமாக பார்க்க வேண்டும். சிறைத்துறை அறிக்கை தவறானது என்று இன்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கை நிரூபிக்கும் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார். கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கூறிய நிலையில், சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை என சிறைத்துறை விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget