மேலும் அறிய

இளம் வாக்காளர்கள் அதிமுகவிற்கே வாக்களிப்பார்கள், அதிமுக மகத்தான வெற்றி பெறும் - எஸ்.பி. வேலுமணி

பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி துறையில் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை முதல் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாக்களிக்க வந்தார். அவர் தனது மனைவி வித்யா மற்றும் மகன் விகாஸ் உள்ளிட்டோர் உடன் நடந்து சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுக இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்றும், மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்பும் நிலையில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பாஜக மற்றும் திமுகவினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும், ஜனநாயக முறைப்படி நேர்மையாக தாங்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி துறையில் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டதாகவும், மருத்துவக் கல்வியில் 7. 5% இட ஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட திட்டங்களால் இளம் வாக்காளர்கள் அதிமுகவிற்கே வாக்களிப்பார்கள் எனவும், அதனால் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டார்.

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஆண் வாக்காளர்கள் 7,71,53 பேர், பெண் வாக்காளர்கள் 8,21,370 பேர், மூன்றாம் பாலினத்தவர் 295 பேர் என மொத்தம் 15,93,168 வாக்காளர்கள் உள்ளனர். பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் ஒன்பது சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த ஈஸ்வரசாமி , அதிமுகவை சேர்ந்த கார்த்திகேயன், பாஜகவை சேர்ந்த வசந்தராஜன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
Embed widget