மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

'கமல்ஹாசன் வாக்குகளை பெற்றுக் கொண்டு தொகுதி பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை' - எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

"கமல்ஹாசன் ஐம்பதாயிரம் வாக்குகள் பெற்றுக் கொண்டு இன்னும் தொகுதி பக்கம் எட்டி பார்க்கவில்லை. வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் கோவைக்காக பல திட்டங்களை பேசி வருகிறார்"

கோவை காளப்பட்டி பகுதியில் ஐ.ஜே.கே. கட்சியின் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “திமுக ஆட்சியாக இருந்தாலும் கோவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தான். கோவையில் 50 ஆண்டு காலத்தில் இல்லாத வளர்ச்சியை நாங்கள் கொடுத்துள்ளோம். கமல்ஹாசன் ஐம்பதாயிரம் வாக்குகள் பெற்றுக் கொண்டு இன்னும் தொகுதி பக்கம் எட்டி பார்க்கவில்லை. வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் கோவைக்காக பல திட்டங்களை பேசி வருகிறார்.

தமிழக அமைச்சர்களையும் கோவையில் காணவில்லை. எடப்பாடி பழனிசாமி பிரதமர் அருகில் உட்கார்ந்து இருந்தார். தமிழ்நாட்டில் இன்றைய ஆளும் கட்சி கோவையை புறக்கணிக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். திமுக புறக்கணித்த திட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதாவது, “பாரிவேந்தர் பாஜகவுடன் முதல் கூட்டணியை தொடங்கியவர். அவர் முதலில் கூட்டணியில் வந்ததுடன் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று ஒலித்தவர். நாடாளுமன்றத்தில் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர் பாரிவேந்தர். திமுகவிற்கு ஒரு சீட்டு கூட வரவிடாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கை பெற்றுக் கொடுத்தது கோவை மக்கள். சிறுகுறு தொழிலுக்கு உறுதுணையாக பாஜக அரசு உள்ளது. வரக்கூடிய காலத்தில் ஒவ்வொரு வெற்றியும் தேசிய ஜனநாயக கூட்டணி உடையது.

இந்தியாவின் மதிப்பு உலக அளவில் மாறிக்கொண்டு வருகிறது. அனைவருக்கும் கழிப்பிடம், கேஸ் இணைப்பு வசதி என தமிழகத்திற்கான பங்கை மத்திய அரசு வழங்கி உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சை முத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”கோவை மண்டல மாநாடு நடைபெற்று வருகிறது. என்.டி.ஏ கூட்டத்தில் பாரிவேந்தர் பிரதமர் தலைமையில் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தார். சென்னைக்கு வந்து நிர்வாகிகளை சந்தித்து கிளை வேலையை தொடங்க உத்தரவிட்டுள்ளார். 2024 தேர்தலுக்கு தயாராக அறிவுரை செய்துள்ளார். கோவையில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் எஸ்.பி.வேலுமணி வானதி சீனிவாசன் கலந்து கொண்டனர். இது என்.டி.ஏ கூட்டணியின் துவக்கமாக பார்க்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சி பெரிய கட்சி. நிறைய நல்லது நடந்துள்ளது. அதன் அடிப்படையில் கூட்டணி வலுவாக உள்ளது. மணிப்பூர் கலவரம் விசாரணையில் உள்ளது. விசாரணைக்கு பின் கருத்து தெரிவிக்கலாம். மக்களை சந்தித்து வருகிறோம். மக்கள் எங்களை வெற்றி பெற செய்தால் கேள்வி கேட்கலாம். பாரிவேந்தர் வாக்குறுதிகளை சிறப்பாக செய்துள்ளார். அதேபோல் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் நின்றால் தொகுதியை சீரமைப்பார்கள். கூட்டணியில் இருப்பவர்கள், மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். கட்சியாக கேட்டால் நாலு தொகுதி கேட்போம் கூட்டணியில் 40 சீட்டு எப்படி கொடுப்பது என்பது அந்த நேரத்தில் தான் முடிவு வரும்.மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றார்கள். ஆனால் செய்யவில்லை. கட்சியின் கருத்துக்கு அமைச்சர் எதிராக செய்கிறார்” எனக் கூறினார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
Driving Class: காசே இல்லாமல் கார் ஓட்ட கத்துக்கலாமா? எப்படி அப்ளை பண்றது? முழு விவரம்
Driving Class: காசே இல்லாமல் கார் ஓட்ட கத்துக்கலாமா? எப்படி அப்ளை பண்றது? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
Driving Class: காசே இல்லாமல் கார் ஓட்ட கத்துக்கலாமா? எப்படி அப்ளை பண்றது? முழு விவரம்
Driving Class: காசே இல்லாமல் கார் ஓட்ட கத்துக்கலாமா? எப்படி அப்ளை பண்றது? முழு விவரம்
IPL Aucton 2025: ரிஷப் பண்டா? கே.எல்.ராகுலா? CSK-வின் புதிய விக்கெட் கீப்பர் யார்?
IPL Aucton 2025: ரிஷப் பண்டா? கே.எல்.ராகுலா? CSK-வின் புதிய விக்கெட் கீப்பர் யார்?
TN Rain: தமிழகத்தை கட்டம் கட்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மைய அறிக்கை
TN Rain: தமிழகத்தை கட்டம் கட்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மைய அறிக்கை
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல மாஸ்டர்! கடவுள் காப்பாத்துவாரு; அஜித்தின் எமோஷனல் பகிர்வு!
நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல மாஸ்டர்! கடவுள் காப்பாத்துவாரு; அஜித்தின் எமோஷனல் பகிர்வு!
Embed widget