மேலும் அறிய

’ஆபரேஷன் பாகுபலி’ - காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகளைத் தொடங்கிய வனத்துறையினர்..!

பாகுபலி யானையை கும்கி யானைகளின் உதவியுடன் மேடு பள்ளங்கள் இல்லாத சமதள பரப்புக்கு வரவழைக்கப்பட்டு, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ’பாகுபலி’ என அழைக்கப்படும் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க, அதற்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ‘பாகுபலி’  என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒரு ஆண் காட்டு யானை உலா வருகிறது. நீண்ட தந்தங்களுடன் ஆஜானுபாகுவான உருவத்துடன் இந்த காட்டு யானை இருப்பதால், பாகுபலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த யானை மற்ற யானை கூட்டத்தோடு சேராமலும் அடர்ந்த வனத்தினுள் செல்லாமலும் மாதக்கணக்கில் குடியிருப்பு பகுதிகளில் தனியே சுற்றித் திரிகிறது. யானைகள் ஒன்றிரண்டு வாரங்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்காமல் இடம் விட்டு இடம் மாறிவிடும் வழக்கம் கொண்டது. ஆனால் இந்த யானை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பகுதியில் இருந்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த வருகிறது. இந்த யானை தற்போது வரை மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை என்றாலும், தொடர்ந்து உணவுக்காக விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.


’ஆபரேஷன் பாகுபலி’ - காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகளைத் தொடங்கிய வனத்துறையினர்..!

இந்த நிலையில் பாகுபலி யானையை பிடித்து, ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்ட ரேடியோ காலர் பொறுத்தி அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஸ் என்ற 3 கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு  வரவழைக்கப்பட்டன. இந்த கும்கி யானைகளின் உதவியுடன் மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் இன்று தொடங்கியுள்ளனர். இதற்காக மேட்டுப்பாளையம் மரக்கிடங்கு பகுதியில் நேற்று வனச்சரகர்கள் பழனிராஜா, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒரு வனவர் மற்றும் 5 வனக்காவலர்கள் என தலா 6 பேர் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவினர் மேட்டுப்பாளையம் வேடர் காலனியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ’ஆபரேஷன் பாகுபலி’ என்ற பெயரில் தற்போது யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


’ஆபரேஷன் பாகுபலி’ - காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகளைத் தொடங்கிய வனத்துறையினர்..!

உடன் வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். பாகுபலி யானையை கும்கி யானைகளின் உதவியுடன் மேடு பள்ளங்கள் இல்லாத சமதள பரப்புக்கு வரவழைக்கப்பட்டு, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். பின்னர்  அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும் எனவும் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களுக்குள் யானை வருவதை தடுத்து வனப்பகுதிக்குள் எளிதில் விரட்ட முடியும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (28-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்
coimbatore power cut: கோவையில் நாளை (25-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (25-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
வன்னியரசை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் - மாட்டுக்கறி விவகாரத்தில் கிருஷ்ணசாமி எச்சரிக்கை
வன்னியரசை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் - மாட்டுக்கறி விவகாரத்தில் கிருஷ்ணசாமி எச்சரிக்கை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Punch Vs XEV 9S Sales: டாடா பஞ்ச் EV-க்கு Punch விட்ட மஹிந்திரா.! தட்டித் தூக்கிய சேல்ஸ்; டாப்புக்கு வந்த XEV 9S..
டாடா பஞ்ச் EV-க்கு Punch விட்ட மஹிந்திரா.! தட்டித் தூக்கிய சேல்ஸ்; டாப்புக்கு வந்த XEV 9S..
Mojtaba Khamenei: ‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Embed widget