மேலும் அறிய

குளமா? குப்பைத் தொட்டியா? - கோவை ஸ்மார்ட்சிட்டி குளங்களின் நிலையென்ன?

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் போன்றவற்றை அழகுபடுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தப்படுகின்றனர். குளக்கரையை அழகுபடுத்துவதில் உள்ள கவனத்தை குளங்கள் மீது காட்டவேண்டும்.

கோவை மாநகராட்சி பகுதியில் 8 குளங்கள் உள்ளன. இக்குளங்கள் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. குளக்கரையில் நடைபாதை, பொழுதுபோக்கு, அலங்கார வளைவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம், பெரிய குளம் மற்றும்  வாலாங்குளம் ஆகியவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. குளக்கரைகள் அழகுபடுத்தபட்டாலும், குளத்தில்  கழிவுகள் கலக்கப்படுவது தொடர்கின்றது. குளத்திற்கு தண்ணீர் வரும்  வாய்க்கால் முறையாக  பராமரிப்பு பணிகள் இல்லாத காரணத்தாலும், கழிவுகள் கலப்பதாலும் இந்த இரு குளங்களிலும்  ஆகாயத்தாமரைகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகின்றது. மேலும் குளங்கள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றன.


குளமா? குப்பைத் தொட்டியா? - கோவை ஸ்மார்ட்சிட்டி குளங்களின் நிலையென்ன?

இந்நிலையில் உக்கடம் பெரியகுளத்தின் கரையில் அடையாளம் தெரியாத நபர்கள் ஊசிகள், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை கொட்டிச் சென்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், நகரின் மையப் பகுதியில் உள்ள குளத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து உக்கடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


குளமா? குப்பைத் தொட்டியா? - கோவை ஸ்மார்ட்சிட்டி குளங்களின் நிலையென்ன?

இதேபோல வாலாங்குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. போதிய ஆக்சிஜன் இல்லாததால் மீன்கள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மீன்கள் செத்து மிதப்பதால் தூர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து கழிவு நீர் கலந்துவருவதே மீன்கள் உயிரிழக்க காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல கடந்த மாதமும் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் மீன்களை அகற்றினர். மீண்டும் அதேபோல மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இந்த சுகாதார சீர்கெடு நிலவுவதால் இறந்த மீன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


குளமா? குப்பைத் தொட்டியா? - கோவை ஸ்மார்ட்சிட்டி குளங்களின் நிலையென்ன?

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ”ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் போன்றவற்றை அழகுபடுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தப்படுகின்றனர். குளக்கரையை அழகுபடுத்துவதில் உள்ள கவனத்தை குளங்கள் மீது காட்டவேண்டும். கழிவு நீர் கலப்பதும், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதும், மீன்கள் செத்து மிதப்பதும் தொடர் கதையாகி வருகிறது. ஸ்மார்ட் சிட்டியில் குளங்கள் ஸ்மார்ட்டாக இல்லை. குளங்கள் குப்பைத் தொட்டிகள் இல்லை என்பதை உணரவேண்டும். கழிவுநீர் கலப்பதை , கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மீன்களை அப்புறபடுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்
coimbatore power cut: கோவையில் நாளை (28-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்
coimbatore power cut: கோவையில் நாளை (25-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (25-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா.? நம்பிக்கையை கொடுத்த அந்த புள்ளிவிவரம் என்ன.?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா.? நம்பிக்கையை கொடுத்த அந்த புள்ளிவிவரம் என்ன.?
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
TASMAC shops Holiday : நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
MG Hector Tomahawk EV: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
Embed widget