மேலும் அறிய

நீலகிரி: சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு - பொதுமக்கள் அச்சம்

மைனலா காப்புக்காடு 2 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதும், சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்ற போது, சிறுத்தை தாக்கி உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம் அரக்காடு பகுதியில் சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் வனப் பகுதிகளை சுற்றி அமைந்துள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகள் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. அவ்வப்போது வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப் பகுதிகளுக்கு நுழைவதும், மனித - வன விலங்கு மோதல்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தேனாடுகம்பை பிரிவு அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. அங்கு வட மாநில தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவர் மனைவி, குழந்தை சரிதா (4) ஆகியோருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று நிஷாந்த் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற நிலையில், தாயுடன் சிறுமி சரிதா இருந்துள்ளார். அப்போது இயற்கை உபாதையை கழிக்க அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு சிறுமி சரிதா சென்றதாக தெரிகிறது.

அப்போது புதர் மறைவில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று, அங்கு நின்று கொண்டிருந்த சிறுமியை கழுத்தில் தாக்கியுள்ளது. மேலும் சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்றது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, தொழிலாளர்கள் அச்சம் அடைந்து சத்தம் போட்டனர். சிறிது தூரத்தில் சிறுமியை கீழே போட்டு விட்டு சிறுத்தை சென்றது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது, கழுத்தில் காயத்துடன் சிறுமி மயக்கம் அடைந்த நிலையில் கிடப்பது தெரிந்தது. 

இது குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுமி சரிதா உயிரிழந்து விட்டார். இதையடுத்து சம்பவ இடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்ததில், சிறுத்தையின் கால் தடம் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை செய்த போது, சம்பவ நடந்த இடத்தில் இருந்து மைனலா காப்புக்காடு 2 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதும், சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்ற போது, சிறுத்தை தாக்கி உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை சுற்றி வனவிலங்கு நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
Embed widget