மேலும் அறிய

திருமணத்தை மீறிய உறவு : இடையூறாக இருந்ததாக 2 வயது குழந்தை கொலை.. இருவர் கைது..!

வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிவ்யா ஸ்ரீ சந்தேகத்திற்கு உரிய வகையில் உயிரிழந்தார்

கோவை அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த இரண்டரை வயது குழந்தையை கொலைசெய்த வழக்கில் தாய் மற்றும் அவரது தகாத நட்புகொண்ட காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை தம்மம்பதி கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டரை வயது சிறுமி நிவ்யாஸ்ரீ உடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிவ்யா ஸ்ரீ சந்தேகத்திற்கு உரிய வகையில் உயிரிழந்தது.

இதுகுறித்து ஆனைமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.


திருமணத்தை மீறிய உறவு : இடையூறாக இருந்ததாக 2 வயது குழந்தை கொலை.. இருவர் கைது..!

இந்த நிலையில் சரோஜினி ஆனைமலை தெற்கு கிராம நிர்வாக அலுவலர் சம்பத்திடம் சரணடைந்து, நிவ்யாஸ்ரீயை கழுத்து நெறித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். கிராம நிர்வாக அலுவலர் ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், காவல் துறையினர் சரோஜினியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனக்கும் தன் கணவருக்கும் அடிக்கடி சண்டைவரும் என்பதால் எனது அம்மா வசிக்கும் சேத்துமடை அண்ணா நகர் பகுதி வீட்டுக்கு சென்று விடுவதாகவும், அப்போது கூலி வேலைக்கு செல்லும் போது சர்க்கார்பதி பகுதியை சேர்ந்த பொம்மன் என்கிற சின்ன பொம்மன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இருவரும் தனிமையில் இருந்ததாகவும், தங்களின் தகாத உறவுக்கு சிறுமி இடைஞ்சலாக உள்ளதால் நிவ்யாஸ்ரீயை கொலைசெய்ய பொம்மன் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பேரில் தனது கணவர் மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு நிவ்யாஸ்ரீயை கடந்த 14-ஆம் தேதி கழுத்தைநெரித்து கொலை செய்தாகவும், காவல் துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சரணடைந்ததாகவும் சரோஜினி காவல் துறையினரிடம் தெரிவித்தார்.


திருமணத்தை மீறிய உறவு : இடையூறாக இருந்ததாக 2 வயது குழந்தை கொலை.. இருவர் கைது..!

இதையடுத்து சந்தேக மரணம் என்பது கொலை வழக்காக மாற்றப்பட்டு, சரோஜினியை ஆனைமலை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பொம்மனை சேத்துமடை பேருந்து நிறுத்தத்தில் காவல் துறையினர் பிடித்தனர்.  இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget