மேலும் அறிய

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

இதுவரை 81 பேரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாகவும், கூடுதல் விசாரணைக்காக கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சயன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து  ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் (44) மற்றும் அவரது உறவினர் ரமேஷ் (34) ஆகியோரை கடந்த மாதம் 25 ம் தேதி நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் கூடலூர் கிளைச் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணைக்கு பின்னர் முதல் முறையாக இருவர் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் சாட்சியங்களை மறைத்தல், சாட்சியங்களை அழித்தல், சாட்சிகளை தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்டது.


கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

இந்நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை இன்று நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்டவர்களில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவர் மட்டும் ஆஜராகினர். அப்போது இவ்வழக்கில் இதுவரை 81 பேரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாகவும், கூடுதல் விசாரணைக்காக கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சஞ்சய் பாபா வழக்கு விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.  அண்மையில் கைதான தனபால், ரமேஷ் ஆகியோரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், மேலும் சிலர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள் என காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (20-10-2026) எங்கெல்லாம் மின் வெட்டு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (20-10-2026) எங்கெல்லாம் மின் வெட்டு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை வந்த முதல்வர் விஜய்: பார்க்க முடியாமல் சிறுவன் ஏமாற்றம்; மற்றொரு குழந்தைக்கு உதவ உறுதியளித்த விஜய்!
கோவை வந்த முதல்வர் விஜய்: பார்க்க முடியாமல் சிறுவன் ஏமாற்றம்; மற்றொரு குழந்தைக்கு உதவ உறுதியளித்த விஜய்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
"இங்க சேர்க்கிறது பெருமை" காமராஜர் பள்ளியில் அலைமோதிய கூட்டம்... விஜயதசமி சிறப்புச் சேர்க்கை!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
Embed widget