(Source: ECI/ABP News/ABP Majha)
Coimbatore to Abu Dhabi Flight: கோவையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை துவக்கம் - தொழில் துறையினர் வரவேற்பு
Coimbatore to Abu Dhabi Flight Service: பிற நாடுகளுக்கும் கோவையில் இருந்து விமானங்கள் இயக்க வேண்டுமென தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமான சேவை ஆகஸ்ட் 10 ம் தேதி முதல் இயக்கப்பட இருக்கின்றது. இது கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்பட இருக்கும் 3 வது சர்வதேச விமானமாகும்.
கோவை பீளமேடு பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். இதனிடையே தொழில் நகரான கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் சர்வதேச விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தொழில் துறையினர் வரவேற்பு
கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமான சேவையானது வரும் ஆகஸ்ட் 20 ம் தேதி முதல் தொடக்க இருக்கின்றது. வாரத்தில் 3 நாட்கள் இந்த விமானமானது இயக்கப்பட இருக்கின்றது. காலை 7.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் புறப்படும் இண்டிகோ விமானம், பிற்பகல் 11:30 மணிக்கு அபுதாபி சென்றடையும். அபுதாபியில் பிற்பகல் 1 மணிக்கு கிளம்பும் இண்டிகோ விமானம், மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும் எனவும், வாரத்தில் 3 நாட்கள் அபுதாபிக்கு விமான சேவையினை இன்டிகோ நிறுவனம் வழங்க இருக்கின்றது. இது கோவையில் இருந்து இயக்கப்படும் மூன்றாவது சர்வதேச விமானம் இது என்பது குறிப்பிடதக்கது. கோவையில் இருந்து அபுதாபிக்கு புதிய விமான சேவை துவங்க இருப்பது, கோவை தொழில் துறையினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிற நாடுகளுக்கும் கோவையில் இருந்து விமானங்கள் இயக்க வேண்டுமென தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.