மேலும் அறிய

திமுக நிர்வாகி கொலை வழக்கு ; இந்து முன்னணி அமைப்பினர் 4 பேர் கைது

சரவண சுந்தரம் சமீபத்தில் இந்து முன்னணி அமைப்பில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இந்து முன்னணியை சேர்ந்த தமிழ்செல்வனுடன் தகராறு இருந்துள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நாகம்மா புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவண சுந்தரம்.  19 வயதான இவர் அன்னூர் இந்து முண்ணனி நிர்வாகியாகியான குட்டி என்கிற ராஜேந்திரனிடம் பைனான்ஸ் தொழிலில் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து வந்து சமீப காலமாக தனியாக  சீட்டு நடத்தும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். சரவண சுந்தரம் சமீபத்தில் இந்து முன்னணி அமைப்பில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் தமிழ்செல்வன் என்கிற ஆட்டோ ஓட்டுநர் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சீட்டு பணம் கொடுத்திருந்த நிலையில், சீட்டில் பணம் எடுத்து விட்டு தமிழ்செல்வன் பணம் தராமல் இழுத்தடிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சரவணசுந்தரத்திற்கும் தமிழ்செல்வனுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. 

 

திமுக நிர்வாகி கொலை வழக்கு ; இந்து முன்னணி அமைப்பினர் 4 பேர் கைது
தமிழ்செல்வன்

இந்நிலையில் கடந்த 27 ம் தேதியன்று அன்னூரை அடுத்த மைல்கல் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சரவண சுந்தரத்தை, தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பரான ராஜராஜன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சரவண சுந்தரத்தின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.வலது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வெட்டிய இருவருக்குமே லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயங்களுடன் கிடந்த சரவண சுந்தரத்தை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சரவண சுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

திமுக நிர்வாகி கொலை வழக்கு ; இந்து முன்னணி அமைப்பினர் 4 பேர் கைது
ராஜராஜன்

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை  ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அன்னூரில்  பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த கொலை தொடர்பாக தமிழ்செல்வன் மற்றும் அவனது நண்பன் ராஜராஜன் ஆகிய இருவரும் அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தமிழ்செல்வனும், ராஜராஜனும் தற்போது இந்து முன்னணி அமைப்பில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

திமுக நிர்வாகி கொலை வழக்கு ; இந்து முன்னணி அமைப்பினர் 4 பேர் கைது
ராஜேந்திரன்

இந்நிலையில் இந்த கொலையை இந்து முன்னணி நிர்வாகி குட்டி என்கிற ராஜேந்திரன் தான் திட்டமிட்டு அரங்கேற்றியதாக உயிரிழந்த சரவண சுந்தரத்தின் உறவினர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரணை நடத்திய அன்னூர் காவல் துறையினர் குட்டி என்கிற ராஜேந்திரன் மற்றும் அவருக்கு உதவிய ரங்கநாதன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

 

திமுக நிர்வாகி கொலை வழக்கு ; இந்து முன்னணி அமைப்பினர் 4 பேர் கைது
ரங்கநாதன்

இந்நிலையில் இருவரும் அன்னூர் பகுதியில் தலைமறைவாகி பதுங்கி இருந்த நிலையில், இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்கு கொலை, கூட்டுசதி செய்தல் என இரண்டு பிரிவுகள் வழக்கு பதிவு செய்த அன்னூர் காவல் துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget