மேலும் அறிய

OPERATION T23 : டி 23 புலி போஸ்பாரா வனப்பகுதியில் கண்டுபிடிப்பு-தேடுதல் வேட்டை தீவிரம்..!

டி 23 புலி போஸ்பாரா வனப்பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் நேற்று டி 23 புலி பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி, தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்பவரையும், சிங்காரா பகுதியில் மங்கள பசவன் என்பவரையும் அடித்துக் கொன்றது. ஏற்கனவே இரண்டு பேரை புலி தாக்கி கொன்ற நிலையில், டி 23 புலியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.

புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், புலியை பிடிக்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டி23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக கூறும் உள்ளூர் மக்கள், புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே சுட்டுக் கொல்லக் கொள்ளாமல் உயிருடன் பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

OPERATION T23 : டி 23 புலி போஸ்பாரா வனப்பகுதியில் கண்டுபிடிப்பு-தேடுதல் வேட்டை தீவிரம்..!

புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். புலியைத் தேடும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில வனத்துறையினர், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோரும் ஈடுபட்டுள்ளனர். புலி தேடுதல் வேட்டையில் 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. 3 ட்ரோன்கள் மற்றும் அதி நவீன கேமராக்கள் மூலம் புலி இருப்பிடத்தை தேடும் பணிகள் நடைபெற்றன. இருப்பினும் புலி பிடிபடாமல் சுற்றி வருகிறது. இதன் காரணமாக வனத்துறையினர் அடிக்கடி புலியை பிடிக்கும் வியூகங்களை மாற்றி வருகின்றனர்.

முதுமலை சரணாலயம் புலிகள் மறைந்து வாழும் அளவிற்கு புதர்மண்டி காணப்படும் சரணாலயம் என்பதாலும், அதிகளவிலான புலிகள் அப்பகுதியில் இருப்பதாலும் டி23 புலியை பிடிப்பதில் வனத்துறையினருக்கு பல்வேறு சவால்களும், சிக்கல்களும் ஏற்பட்டன. மேலும் தொடர் மழை காரணமாகவும் புலியை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. வனப்பகுதியில் பரண் அமைத்து கால்நடை மருத்துவர், வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் குழுக்களாக புலி நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். புலியை பிடிக்கும் பணியில் இன்று 18 ஆவது நாளாக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

OPERATION T23 : டி 23 புலி போஸ்பாரா வனப்பகுதியில் கண்டுபிடிப்பு-தேடுதல் வேட்டை தீவிரம்..!

இந்நிலையில் டி23 புலி போஸ்பாரா வனப்பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் நேற்று டி 23 புலி பதிவாகியுள்ளது. அப்புலியை நேரடியாக வனத்துறையினர் பார்த்து 8 நாட்களுக்கு பின்னர், மீண்டும் புலி கேமராவில் பதிவாகியுள்ளது. மசினகுடி, தெப்பகாடு, முதுமலை வழியாக போஸ்பாரா வனப்பகுதிக்கு புலி சென்றுள்ளது. அப்பகுதிக்கு விரைந்துள்ள வனத்துறையினர் டி 23 புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புலி மீண்டும் தேவர்சோலை, மே பீல்ட் பகுதியை நோக்கி செல்லலாம் என்பதால், அப்பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Thalapathy Rerelease :  ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Thalapathy Rerelease : ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Embed widget