மேலும் அறிய
Advertisement
கோவை : 349 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று ; 5 பேர் உயிரிழப்பு..
கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 24 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 349 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 24 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 4121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 346 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 18 ஆயிரத்து 158 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 5 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2097 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் கொரோனா தொற்று விகிதம் 3.7 ஆக குறைந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் மார்ச் 31-ஆம் தேதிக்கு முன் முதல் தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராமசெட்டி பள்ளி, அம்மணி அம்மாள் பள்ளி, வடக்கு மண்டல அரசு மேல்நிலைப் பள்ளி, தெற்கு மண்டல மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மற்றும் சித்தாபுதூர் பள்ளி ஆகிய இடங்களில் இதற்கான முகாம் நடைபெறவுள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
ஈரோடு மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. ஈரோட்டில் இன்று 230 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 247 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 91168-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 87314 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 612 ஆகவும் உயர்ந்துள்ளது. ஈரோட்டில் தொற்று விகிதம் 2.7 ஆக குறைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 176 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 319 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 8 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 84975 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 82527 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 792 ஆகவும் உள்ளது. திருப்பூரில் கொரோனா தொற்று விகிதம் 3.5 சதவீதமாக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 114 பேர் குணமடைந்துள்ள நிலையில், 845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 29215 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28201 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. நீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 4.9 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion