மேலும் அறிய

கோவையில் 2 இலட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகள்

கடந்த 1 ம் தேதி தினசரி பாதிப்பு 3332 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று 1276 பேருக்கு குறைவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் இன்று 2056 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மொத்த தொற்று பாதிப்பு 2 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

சென்னையை விட கோவையில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருதிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. மே மாதத்தில் உச்சத்தை அடைந்த தொற்று பாதிப்புகள் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்புகள்  குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் இன்று 2056 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று 2236 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்றைய தினத்தை விட 180 பேருக்கு குறைவாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 660 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 18 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 4612 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 371 பேராக உயர்ந்துள்ளது.அதேசமயம் கொரோனா தொற்றால் இன்று 31 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1689 ஆக உயர்ந்துள்ளது.


கோவையில் 2 இலட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகள்

கடந்த 1 ம் தேதி தினசரி பாதிப்பு 3332 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று 1276 பேருக்கு குறைவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அன்று 1936 பேராக இருந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, இன்று 2676 பேர் கூடுதலாக குணமடைந்துள்ளனர். அன்று சிகிச்சையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் மேல் இருந்த நிலையில், இன்று 18 ஆயிரமாக குறைந்துள்ளது. இது கொரோனா பாதிப்பில் இருந்து கோவை படிப்படியாக மீண்டு வருவதை காட்டுகிறது. அதேசமயம் கடந்த ஒன்றாம் தேதி 32 ஆக இருந்த உயிரிழப்புகள், இன்று 31 ஆக இருக்கிறது.

ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்

கொரோனா பாதிப்பில் ஈரோடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இன்றும் சென்னையை விட ஈரோட்டில் அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்று 1365 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். 1921 பேர் குணமடைந்துள்ள நிலையில், 12 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 73 ஆயிரத்து 612 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகள் 486 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 853 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர். 836 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 ஆயிரத்து 498 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இன்று 419 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று உயிரிழப்புகள் இல்லாத நாளாக அமைந்துள்ளது. 585 பேர் குணமடைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
Coimbatore power cut: கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!
கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget