மேலும் அறிய

கோவையில் பயங்கரம்! அடுத்தடுத்து வெடித்த 20 கேஸ் சிலிண்டர்கள் - அலறி அடித்து ஓடிய மக்கள்

கோவையில் அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

​கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலக் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கி இருந்த தற்காலிக குடியிருப்பில் அடுத்தடுத்து 20 சமையல் கேஸ் சிலிண்டர்கள் வெடித்துப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

கோவை, நவ இந்தியா பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் சார்பில் 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, அதில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.

​இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்குச் சென்று இருந்த நேரத்தில், ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டு இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இந்தத் தீ அடுத்தடுத்த கொட்டகைகளுக்கும் பரவியதால், அங்கு வைக்கப்பட்டு இருந்த மேலும் 7 சிலிண்டர்கள் வரிசையாக வெடித்துச் சிதறின. மொத்தம் 20 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து  தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி முழுதும் அடர்ந்த புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பீளமேடு மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தகரக் கொட்டகைகளை உடைத்து, பல மணி நேரம் போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று இருந்ததாலும், அங்கு இருந்த சிலர் உடனடியாக வெளியேறியதாலும் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் அல்லது காயமும் ஏற்படவில்லை என காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

​ஒரே நேரத்தில் 20  சிலிண்டர்கள் வெடித்துத் தகரக் கொட்டகைகள் முற்றிலும் தீக்கிரையான இந்தச் சம்பவம் கோவை நகர்ப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (08-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (08-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget